
Cinema News
பருத்தி வீரன் படத்தில் பாடகியை பெண்டு கழட்டிய அமீர்!.. மனுஷன் இவ்வளவு கஷ்டப்பட்டாரா?!..
Published on
By
Ameer: பிரபல இயக்குனர் அமீர் எப்போதுமே தன்னுடைய படங்களில் என்ன வேண்டும் என்பதை கறாராக கேட்டு வாங்கி கொள்வார். அதனை சரியாக வடிவமைத்து படங்களில் கொண்டு வருவதில் தெளிவாக இருப்பார். இப்படி ஒரு முறை பாடகியிடமே முறைத்து கொண்ட சம்பவமும் நடந்து இருக்கிறதாம்.
அமீரின் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது பருத்தி வீரன். இந்த படத்துக்கு பின்னால் தற்போது ஏகப்பட்ட சர்ச்சை நிலவி வருகிறது. அதையெல்லாம் ஒதுக்கி விட்டு இப்படத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்து அமீர் சொல்ல சம்பவம் தான் தற்போது வைரலாகிறது.
இதையும் படிங்க: அம்மா சொல்றது தான் உண்மை.. சாட்சி சொன்ன செழியனை குழப்பிய ஈஸ்வரி… பொய் சொல்லும் கோபி..!
கார்த்தி, ப்ரியாமணி, கஞ்சா கருப்பு, சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் தான் பருத்தி வீரன். இப்படத்தினை அமீர் தயாரித்தார். படத்தின் பாடல்களை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். பாடல் முதல் பட காட்சிகள் வரை அத்தனையுமே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் ஒரு பாடலுக்கு அமீர் ஸ்ரேயா கோஷல் தான் வேணும் எனக் கேட்டு இருக்கிறார். கிட்டத்தட்ட 2 வாரம் காத்து இருந்து ஸ்ரேயாவை பாட அழைத்து வந்து அய்யயோ பாடலை பாட தொடங்கி இருக்கிறார். ஆனால் அவர் பாடியது அமீருக்கு செட்டாகும் எனத் தோணவில்லையாம். அவரிடம் எனக்கு காலேஜ் லெவல் ஸ்ரேயா கோஷல் இந்த பாடலை பாட வேண்டாம்.
இதையும் படிங்க: பிக்பாஸ் தான் இப்ப முக்கியமா? அத விட இத பண்ணியிருக்கலாம் – ஆண்டவர் பொழப்புல மண்ணள்ளிப் போட்டுருவாங்க போல
இதைக் கேட்ட ஸ்ரேயாவுக்கு இகோ ஆகிவிட கடைசியில் அவரே ட்ரை செய்து பாடி முடித்தாராம். பாடல் அருமையாக வந்து அதை கேட்டப்பின் ஸ்ரேயாவே அமீரை சந்தித்து இது என்னுடைய ஸ்டைல் மாதிரி இல்லாமல் வித்தியாசமா இருக்கு எனக் கூறி பெருமைப்பட்டு இருக்கிறார். இந்த விஷயத்தினை அமீர் தன்னுடைய பேட்டி ஒன்றில் சொல்ல தற்போது அந்த வீடியோ ட்ரெண்ட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Manikandan: எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது திறமையையும், உழைப்பையும் மட்டுமே நம்பி சினிமாவில் நுழைந்து போராடி பல வேலைகளை செய்து...
Ajith: நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மாதிரி கார் ரேஸில் கலந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் உண்டு. மனைவி ஷாலினி கேட்டுக்...
Idli kadai: பாக்கியராஜின் உதவியாளரான பார்த்திபன் புதிய பாதை என்கிற திரைப்படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே...
Idli kadai Review: தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கியிருக்கிறார். இதற்கு முன்...
Vijay: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து அந்த...