ரியோ ராஜ் நடிப்பில் வெளிவந்த ‘ஜோ’… 5 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?…

Published on: November 29, 2023
joe
---Advertisement---

Joe movie: விஜய் டிவி மூலம் பிரபலமாகி நடிகராக மாறியவர்களில் ரியோ ராஜும் ஒருவர். சன் மியூசிக் சேனலில் வீஜேவாக வேலை செய்தவர் இவர். கனா கானும் காலங்கள், கல்லூரி சாலை போன்ற தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர். பல டிவி நிகழ்ச்சிகளில் ஆங்கராக இருந்துள்ளார்.

விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த சத்ரியன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் மூலம் ஹீரோவாக மாறினார். இந்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரித்திருந்தார். அதன்பின் பிளான் பண்ணி பண்ணனும் என்கிற படத்தில் நடித்தார்.

இதையும் படிங்க: சும்மா பரபரக்குதே!.. ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் எல்லாம் ஓரம் போங்கப்பா.. பார்க்கிங் பட சீனை பார்த்தீங்களா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இப்போது சிந்தாமணி என்கிற சீரியிலும் நடித்து வருகிறார். அதோடு அவரின் நடிப்பில் உருவான ஜோ என்கிற திரைப்பட,ம் 5 நாட்களுக்கு முன்பு வெளியானது. ரொமாண்டிக் டிராமாவாக உருவான இப்படத்தை ஹரிஹரன் ராம் என்பவர் இயக்கியிருந்தார்.

இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சமூகவலைத்தளங்களில் பலரும் இப்படத்தை பாராட்டி எழுதினார்கள். நேர்மறையான விமர்சனமும் வெளிவந்தது. எனவே, இப்படத்திற்கு தியேட்டர்களும் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் இதுவரை 4-5 கோடியை வசூல் செய்துள்ளது.

இதையும் படிங்க: பாகுபலியை போட்டு பொளக்க ரெடியாகிட்டாரா சூர்யா!.. கங்குவா படத்துல இவ்ளோ விஷயம் இருக்கா!..

ரியோ ராஜ் நடிப்பில் இதற்கு முன் வெளிவந்த படங்கள் இந்த அளவு கூட வசூல் செய்தது இல்லை என சொல்லப்படுகிறது. அதோடு, இந்த வாரம் முழுவதும் இந்த படத்திற்கு வசூல் இருக்கும் என்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இது ரியோ ராஜுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அதோடு, இந்த படம் ரசிகர்களுக்கு பிடித்திருப்பதால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரும் என கணிக்கப்படுகிறது. இதுபோல, நல்ல கதையம்சம் கொண்ட கதைகளில் ரியோ ராஜ் நடித்தால் அவருக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கும் என நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: அமீர் அவ்வளவு சொல்லியும் கேட்காத சரவணன்!.. வீணா வாழ்க்கையை கெடுத்துக்கிட்டாரே!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.