Cinema News
இதுதான் லாஸ்ட் ஸ்டேஜ்! கேப்டன் சிகிச்சை குறித்து விளக்கமளித்த மருத்துவர் – இப்படியெல்லாம் இருக்கா?
Captain Vijayakanth: நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நிலையில் தற்போது சீராக இல்லை என மருத்துவ அறிக்கை வெளியிட்டிருந்தது. கடந்த சில வாரங்களாகவே விஜயகாந்துக்கு தொற்று இருந்ததாகவும் அது தீவிரமடைந்ததால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிப்பதாகவும் அந்த மருத்துவ அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.
அதிலும் அவருக்கு டிரக்கிடாஸ்டோமி என்ற சிகிச்சை அளிப்பதாக கூறப்பட்டது. டிரக்கியாஸ்டோமி என்றால் என்ன? அதனால் என்ன என்ன பயன்? ஏன் அதை கொடுக்கிறோம் என்பது குறித்து மருத்துவர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
அதாவது இந்த குளிர் சீசனில் பொதுவாகவே காய்ச்சல் , இருமல் , சளி என தொற்று மூலமாக ஏற்படுகிறது. அது சாதாரணமாக இருந்தால் ஆண்டிபயாடிக் கொடுத்து ஐந்து நாள்களில் குணப்படுத்திவிட முடியும். அது கொஞ்சம் அதிகமாக அதாவது தொற்று அதிகமாகும் போது நிம்மோனியாவாக மாறிவிடுகிறது.
இதையும் படிங்க: அவ்வளவு தான் எல்லாம் சும்மாவா? இரண்டாவது காதலியை பிரிந்த பப்லு பிரித்விராஜ்..?
விஜயகாந்தை பொறுத்துவரைக்கும் அவருக்கு அந்த தொற்று அதிகமாக இருந்திருக்கலாம். மேலும் மாஸ்க் மூலமாக மூச்சு விட முடியாத மற்றும் வாயில் டியூப் போட்டு மூச்சு விட முடியாத சூழலில் இருக்கும் மிகவும் மோசமான நிலையில் இருப்பவர்களுக்கு அடுத்தகட்ட சிகிச்சைதான் இந்த டிரக்கியாஸ்டோமி என அந்த மருத்துவர் கூறினார்.
அதன் மூலம் நேரிடையாக தொண்டையில் ஓட்டை போட்டு வெண்டிலேட்டரை சொருவி மூச்சு இழுக்கும் ஒரு முறைதான் இந்த டிரக்கியாஸ்டோமி என கூறினார். அதுவும் இதுதான் கடைசி ஸ்டேஜ்ஜாம். இது விஜயகாந்துக்க்கு செய்கிறார்கள் என்றால் அது சிவியராக இருக்கும் பட்சத்தில் தான் செய்கிறார்கள் என்றும் அந்த மருத்துவர் கூறினார்.
இதையும் படிங்க: பிக்பாஸ் டீம்மே அழுதுருவாங்க போலயே… வனிதா அக்கா உள்ள போறாங்களாம்… அப்போ இந்த வாரம் எலிமினேஷன்..?
இதையும் தாண்டி ஒரு சிகிச்சை என்றால் அது எக்மோ சிகிச்சையாம். ஜெயலலிதாவின் கடைசி கட்டத்தில் அவருக்கு இந்த சிகிச்சைதான் பயன்படுத்தினார்களாம். அதாவது நுரையீரல் செய்கிற அனைத்து வேலைகளையும் இந்த எக்மோ செய்துவிடுமாம். ஒரு வேளை அந்த ஸ்டேஜிற்கு விஜயகாந்து செல்ல நேர்ந்தால் எக்மோ தேவைப்படலாம் என்றும் அந்த மருத்துவர் கூறினார்.