Atlee vijay: தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி வரும் ஷங்கரின் உதவியாளர்தான் அட்லி. அருண்குமார் என்பது இவரின் நிஜப்பெயர். ராஜாராணி திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார். ஆர்யா – நயன்தாரா நடித்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
ஏற்கனவே நண்பன் படத்தில் உதவி இயக்குனராக அட்லீ வேலை செய்தபோது விஜயுடன் பழக்கம் ஏற்பட்டது. எனவே, விஜயை வைத்து தெறி படத்தை இயக்கினார் அட்லீ. அட்லியின் மேக்கிங் விஜய்க்கு பிடித்திருந்தது. அதோடு, அட்லி – விஜய் காம்பினேஷன் விஜய் ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது.
இதையும் படிங்க: அவ்வளவு தான் எல்லாம் சும்மாவா? இரண்டாவது காதலியை பிரிந்த பப்லு பிரித்விராஜ்..?
எனவே, தொடந்து அட்லியின் இயக்கத்தில் மெர்சல், பிகில் ஆகிய படங்களில் நடித்தார் விஜய். விஜய்க்கு ஒரு பாசமான தம்பி போல அட்லீ மாறிவிட்டார். அதன்பின் பாலிவுட்டுக்கு போய் ஷாருக்கானை வைத்தும் படம் இயக்கி இந்திய சினிமாவில் ஒரு பெரிய இயக்குனராக மாறியிருக்கிறார் அட்லீ.
அடுத்து அட்லீ யாரை வைத்து படமெடுப்பார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கமல் – ஷாருக்கான் கூட்டணியில் ஒரு படத்தை இயக்க அவர் முயற்சி எடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. தனது அடுத்த படத்திற்காக ஹாலிவுட் கதாசிரியர் ஒருவருடன் அட்லீ கைகோர்க்கவுள்ளார். விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிக்பாஸ் டீம்மே அழுதுருவாங்க போலயே… வனிதா அக்கா உள்ள போறாங்களாம்… அப்போ இந்த வாரம் எலிமினேஷன்..?
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அட்லீ ‘நண்பன் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்ததும் விஜய் என்னை அழைத்தார். படத்தை முடித்துவிட்டோம். உங்கள கவனிச்சேன். ஆக்டிவா வேலை பாக்குறீங்க. உங்க இயக்குனருக்கு உண்மையா உழைக்கிறீங்க.. நல்ல கதை இருந்தா சொல்லுங்க.. சேர்ந்து படம் பண்ணுவோம்’ என என்னிடம் சொன்னார். என்னோடு இணைந்து பணியாற்ற தயாராக இருந்த முதல் ஹீரோ விஜய் அண்ணன்தான்’ என அட்லீ கூறினார்.

ராஜா ராணி படத்தை பார்த்த விஜய்க்கு அப்படம் மிகவும் பிடித்திருந்தது. எனவே, சொல்லியபடியே அட்லியுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களில் விஜய் நடித்தார். இப்போது அட்லீக்கு பாசக்கார அண்ணனாகவும் மாறிவிட்டார். ஷாருக்கான் பட வாய்ப்பு வந்தபோது ‘நீ இந்த படத்தை பண்ணியே ஆகணும்’ என அவரை உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தவரும் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கதை கிடைக்கலையோ… போரடிக்குது மக்கா..! சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கும் தில்லாலங்கடி..!
