Connect with us

latest news

கதை கிடைக்கலையோ… போரடிக்குது மக்கா..! சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கும் தில்லாலங்கடி..!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி சந்தோஷமாகி விஜயாவின் பக்கத்தில் அமர்ந்து எங்க மம்மி கூட இன்னும் வரலை ஆனா நீங்க வந்து இருக்கீங்க எனக் கூறி சந்தோஷப்படுகிறார். நான் அந்த வீட்டுக்கு வரதுக்கு நீங்க சொல்றதுக்கு வேணா யோசிக்கிறேன் என்கிறார்.

அந்த நேரத்தில் ஸ்ருதியின் அம்மா உள்ளே வர ஓடிச்சென்று அவரை கட்டிக்கொள்கிறார். உடனே விஜயா உங்களுக்கு பொண்ணு மேல அக்கறை இல்லாம இருக்கலாம். ஆனா எனக்கு என் பையன் மேல பாசம் இருக்கு. அதான் நான் முதலில் வந்து இருக்கேன் என்கிறார். பின்னர் ரவி எல்லாரையும் உட்கார சொல்லி காபி போட செல்கிறார்.

இதை தொடர்ந்து ஸ்ருதி எங்க வீட்டுக்கு தான் வரணும். இவங்க அங்க தான் இருக்கணும் என்கிறார். ஸ்ருதி அம்மாவும் அவ உங்க வீட்டு பொண்ணு. என்ன வேணாலும் செய்யுங்க என்கிறார். இதனால் விஜயா தெனாவெட்டாக பார்க்க ஆனா உங்க மருமக மீனா வந்து பேசுனா அவ சொன்ன நியாயத்தால தான் இங்க வந்தேன் என்கிறார் ஸ்ருதியின் அம்மா. 

இதையும் வாசிங்க:அருண்குமார் அட்லி ஆன கதை எப்படி தெரியுமா?!.. இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கா?!…

ஸ்ருதி நான் வரலைனு சொன்னேனே என்க ஸ்ருதியின் அம்மா உனக்கு இப்போ பாதுகாப்பு வேணும். நீ அங்க இருக்கத்தான் நல்லது என்கிறார். இதை தொடர்ந்து அவரும் ஓகே சொல்லி விடுகிறார். உடனே ரவி குஷியில் இருங்க சமையல் செய்றேன் என்கிறார். இதை தொடர்ந்து அங்கு வரும் விஜயா நான் வந்து சொன்னதா அப்பாக்கு தெரிய வேண்டாம் என்கிறார்.

அடுத்து முத்துவை காண வருகிறார் மீனா. சமையல் செய்து எடுத்து வந்து இருப்பதாக கூற அந்த சமையலை ட்ரீட் கேட்ட நண்பர்களிடம் கொடுத்து விடுகிறார். மீனாவை கோயிலுக்கு கூட்டிக்கிட்டு போய் அன்னைக்கு என்னை தூக்க சொன்னல. இன்னைக்கு நீ என்னை தூக்கிட்டு சுத்து என்கிறார். மீனா சரி ரெடி வாங்க என்க அய்யோ வேணாமப்பா. உங்க அம்மா உனக்கு திருஷ்டி சுத்த சொன்னாங்க.

அதான் நீங்களே செய்யுங்கனு கூட்டிட்டு வந்துட்டேன் என்கிறார். இதையடுத்து மீனாவுக்கு திருஷ்டி சுத்தி போடுகின்றனர். இதை தொடர்ந்து மீனாவின் அம்மா, அவர் அப்பா இருந்து இருந்தா சந்தோஷப்பட்டு இருப்பார் என்கிறார். அப்போ முத்து மாமா இங்க தான் இருப்பாரு. உங்களை பாத்துக்கிட்டு இருப்பாரு என்கிறார். அவர்கள் காரில் கிளம்பிவிட மீனா முத்து செய்ததுக்கு நன்றி சொல்வதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

இதையும் வாசிங்க: நீங்க உருட்டுங்க… மீண்டும் கல்யாண சீன் வச்சிராதீங்கப்பா.. பாக்கியலட்சுமி டீமை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

google news
Continue Reading

More in latest news

To Top