மூச்சுவிட சிரமப்படும் விஜயகாந்த்!.. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை என்ன?!.. நடப்பது இதுதான்!..

Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டு செயல்படாத நிலையில் இருக்கிறார். நிற்கவோ, நடக்கவோ, பேசவோ கூட அவரால் முடியவில்லை. அதோடு, தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணரமுடியாத நிலையிலும் அவர் இருப்பதுதான் சோகம்.

அவ்வப்போது வீல் சேரில் அமர்ந்தபடியே தேமுதிக தொண்டர்களை சந்தித்து வந்தார். இந்நிலையில்தான், கடந்த 18ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கடுமையான இருமல் மற்றும் சளித்தொல்லையால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: நயன் பிறந்தநாளுக்கு வி்க்கி பரிசாக கொடுத்த கார் இத்தனை கோடியா?.. செம லவ்வு போல!…

மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், தீடிரென அவரின் உடல் பின்னடைவை சந்தித்திருப்பதாக 2 நாளைக்கு முன்பு மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது. இது விஜயகாந்த் ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. 14 நாட்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இதைத்தொடர்ந்து, விஜயகாந்தின் உடல்நிலை குறித்து வதந்திகளும் சமூகவலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து ‘கேப்டன் நன்றாக இருக்கிறார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். வீண் பதட்டமோ, வதந்திகளோ தேவையில்லை’ என பிரேமலதா வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில், இன்று காலை முதல் விஜயகாந்தின் உடல்நிலை பின்னடைவு என செய்திகள் வெளியாகி வருகிறது. இப்போது விஜயகாந்த் மூச்சு விட சிரமப்பட்டு வருகிறார். எனவே, பைபாஸ் என சொல்லப்படும் முறையில் அவருக்கு செயற்கையாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

அதாவது, அவரின் நுரையீரலில் நிறைய சளி சேர்ந்துள்ளது. அவற்றை முழுவதுமாக நீக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 2 வாரங்கள் சிகிசைக்கு பின் விஜயகாந்த் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அந்த நடிகையுடன் ஜோடி போட ஆசைப்பட்டு ஏமாந்துபோன ரஜினி!.. வடை போச்சே!..