Cinema News
தன் ரசிகர்களுக்காக பலரிடமும் மன்னிப்பு கேட்ட தல அஜித்!. தளபதி இவர்கிட்ட கத்துக்கணும்..
Ajith Kumar: அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பல படங்களிலும் சாக்லேட் பாயாக நடித்து ஒரு கட்டத்தில் ஆக்ஷன் கதைகளில் நடிக்க துவங்கி பின்னர் மாஸ் ஹீரோவாக மாறியவர் அஜித் குமார். 90களில் பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டதை உருவாக்கியவர்.
இவருக்கு பல பெண் ரசிகைகளும் உருவானார்கள். பில்லா படம் மூலம் ஸ்டைலீஸ் ஹீரோவாக மாறி மங்காத்தா படம் மூலம் மாஸ் ஹீரோவாக மாறினார். அந்த படத்திற்கு பின் நெகட்டிவான வேடங்களிலும் நடிக்க துவங்கினார். இவரின் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ஹிட் அடித்திருக்கிறது.
இதையும் படிங்க: ரஜினி, கமலுக்கு அப்புறம் தம்பி அஜித்தான்!.. அட நம்ம பிரபுவே இப்படி சொல்லிட்டாரே!…
அதிலும் வீரம், விஸ்வாசம், வேதாளம், துணிவு ஆகிய படங்கள் மிகப்பெரிய வசூலை பெற்றது. இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இன்னும் 2 மாதங்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அதன்பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.
இந்த படம் ஒரு பேன் இண்டியா படமாக வெளியாகும் என செய்திகள் கசிந்துள்ளது. விஜய் நடிப்பில் உருவான லியோ படத்தின் டிரெய்லர் வெளியானபோது அந்த வீடியோ சென்னை கோயம்பேடு தியேட்டரில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது, விஜய் ரசிகர்கள் தியேட்டரில் இருந்த இருக்கைகளை சேதப்படுத்தியது எல்லோருக்கும் தெரியும்.
இதையும் படிங்க: ரசிகர்கள் இத செஞ்சா நான் ஜெயிச்ச மாதிரி! அஜித் சொன்ன சீக்ரெட்டை பகிர்ந்த இயக்குனர்
இதை அஜித் ரசிகர்கள் பல வருடங்களுக்கு முன்பே செய்திருக்கிறார்கள். அஜித் நடிப்பில் 2001ம் வருடம் வெளியான திரைப்படம் சிட்டிசன். இந்த படத்தில் விஜய் பல தோற்றங்களில் வருவார். அஜித்துக்கு அதிக ரசிகர்கள் உருவாகியிருந்த காலம் அது. எனவே, தியேட்டரில் கூட்டம் அலைமோதியது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவி திரையரங்களில் முதல் நாள் முதல் காட்சியின்போது அஜித் ரசிகர்கள் பல இருக்கைகளை அடித்து சேதப்படுத்தினர். அதுபோல பல ஊர்களிலும் நடந்தது. இதைக்கேள்விப்பட்ட அஜித் எந்தெந்த தியேட்டர்களில் எல்லாம் அவரின் ரசிகர்கள் இருக்கைகளை சேதப்படுத்தினார்களோ அந்த தியேட்டர் அதிபர்களை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், இனிமேல் இப்படி நடிக்காதவாறு என் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்கிறேன் எனவும் வாக்குறுதி அளித்தாராம்.
திரையுலகில் ரஜினி, அஜித் இப்படி மற்றவர்களின் பிரச்சனைகளை புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்கும் நடிகர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அஜித் இப்படி சொல்லுவாருனு நினைச்சு கூட பார்க்கல! ‘நாடோடி’ பட நடிகை பகிர்ந்த சூப்பர் தகவல்