வீண் வதந்திகளை நம்பவேண்டாம்… கணவரின் புகைப்படங்களை பகிர்ந்த பிரேமலதா… அட நம்ம கேப்டன பாருங்க…

Published on: December 2, 2023
vijayakanth
---Advertisement---

Vijayakanth: தமிழ் சினிமாவில் கேப்டனாக வலம் வருபவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவில் நடிக்க திறமை மட்டுமே போதும் என்பதை நிரூபித்தவர் விஜயகாந்த். மேலும் சினிமாவில் நுழைவதற்கு நிறம் ஒரு தகுதி அல்ல என்பதை காட்டியவர் இவர். இவர் இனிக்கும் இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின் பல வல்லரசு, ரமணா போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இவர் சினிமாவில் வாய்ப்பு தேடி அலையும் போது நீயெல்லாம் சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறாயா? என பல தயாரிப்பாளர்கள் அவமானபடுத்தியுள்ளனர்.

இதையும் வாசிங்க:எல்லோரும் ஏன் விஜயகாந்தை கொண்டாடுகிறார்கள்?.. அப்படி அவர் என்னதான் செய்தார்?!. வாங்க பார்ப்போம்!..

ஆனாலும் தனது விடாமுயற்சியினால் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தார். இவர் மேலும் அரசியல் மீது கொண்ட ஆர்வத்தினால் அரசியலிலும் குதித்தார். மிகவும் துணிச்சலான தலைவராய் இருந்த விஜயகாந்துக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. பல ஆண்டுகளாய் உடல்நிலை சரியில்லாமல் இருந்த விஜயகாந்த் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியாகி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

அதன்படி விஜயகாந்த் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்தன. மேலும் மருத்துவ அறிக்கையின்படி விஜயகாந்தின் நுரையீரல் சரிவர வேலை செய்யவில்லை எனவும் மேலும் 14 நாட்கள் அவர் மருத்துவமனையில்தான் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதையும் வாசிங்க:ராவுத்தர் – விஜயகாந்த் பிரிவு துவங்கி புள்ளி அதுதான்!.. கடைசிவரை சேராமல் போன சோகம்..

இது கேப்டனின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களின் மன கஷ்டத்தை தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது அவரது மனைவி கேப்டன் மியாட் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாகவும் மேலும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கேப்டன் அவருடன் எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதை பார்க்கும்போது ரசிகர்களுக்கு கேப்டன் விரைவில் வந்துவிடுவார் எனும் நம்ப்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அப்படம் உள்ளது.

viajyakanth and family
viajyakanth and family

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.