சிறுமி கேட்ட ஏடாகூடமான கேள்வி!.. அசரவைக்கும் பதிலில் அசத்திய கேப்டன் விஜயகாந்த்…

Published on: December 3, 2023
vijayakanth
---Advertisement---

தமிழ் சினிமாவிற்கு நிறம் ஒரு தகுதியல்ல என்பதை நிரூபித்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் தனது நடிப்பின் மூலம் தனக்கென தனி மக்கள் கூட்டத்தையே சேர்த்தவர். இவர் நடித்த முதல் திரைப்படம் இனிக்கும் இளமை. இதன் பின் பல வெற்றித்திரைப்படங்களை கொடுத்த விஜயகாந்த் பின் முன்னணி நடிகராக வலம்வந்தார்.

இவர் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன், பூந்தோட்ட காவல்காரன் போன்ற திரைப்படங்கள் இவருக்கென தனி அந்தஸ்த்தை பெற்று தந்தன. இவரை மக்கள் கேப்டன் என்றே அழைத்தனர். இவர் அனைவருக்கும் உதவக்கூடியவர். மக்களுக்கு உதவ வேண்டும் எனும் எண்ணத்தில் இவர் அரசியலிலும் ஈடுபட்டார்.

இதையும் வாசிங்க:டென்சன் பண்ணாதீங்க பாஸ்!. வெற்றிமாறனை கடுப்பாக்கிய ஹரிஸ் கல்யாண்!.. வட போச்சே!.

ஆனால் இவரது உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சினையால் இவர் அரசியலில் நிலைக்க முடியவில்லை. அரசியலில் தான் நிற்காவிட்டாலும் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டே வந்தவர் விஜயகாந்த். சமீபத்தில் இவர் உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சினையினால் இவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சையில் இருக்கும் விஜயகாந்தை எண்ணி அவரது ரசிகர்களும் தொண்டர்களும் மிகுந்த வேதனையில் உள்ளனர். ஆனால் நேற்று இவரது மனைவி வெளியிட்ட புகைப்படத்தால் கேப்டன் நலமாக இருப்பதை மக்கள் உறுதி செய்து கொண்டனர்.

இதையும் வாசிங்க:நம்பாத விஜயகாந்த்.. அவமானத்தை தாண்டி சாதித்து காட்டிய செல்வமணி.. மறக்க முடியாத புலன் விசாரணை…

ஒரு முறை கேப்டனிடம் பள்ளி மாணவி ஒருவர் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். நீங்கள் அரசியலுக்கு வந்ததற்கு காரணமே பிரபலமாகதானே? என கேட்டுள்ளார். அப்போது கேப்டன் கூறிய பதிலில் அந்த மாணவி வாயடைத்து போய்விட்டாராம். விஜயகாந்த் அம்மாணவியிடம், நான் பிரபலமாக வேண்டும் என நினைத்திருந்தால் சினிமாவிலே இருந்திருப்பேன்… சினிமாவில் எனக்கில்லாத செல்வாக்கா…நான் அரசியலுக்கு வந்த பின்னர்தான் என் மீது பல விமர்சனக்களை வைக்கின்றனர்… மேலும் நான் சினிமாவில் இருந்திருந்தால் என்னிடம் உதவி என ஒரு மாணவர் கேட்டு வந்தால் நான் அவருக்கு உதவி செய்யலாம். அவரது படிப்பையே நான் பார்த்து கொள்ளலாம்.

ஆனால் இதே நான் அரசியலில் இருந்தால் உன்னை போல பல மாணவர்களுக்கு நான் உதவி செய்ய இயலும் என கூறினாராம். இந்த பதிலை கேட்ட மாணவி அசந்துபோய்விட்டாராம். இப்படி பல உதவிகளை செய்த விஜயகாந்த் விரைவில் உடல்நிலை சரியாகி வரவேண்டும் என பல ரசிகர்களும் வேண்டுகின்றனர்.

இதையும் வாசிங்க:எல்லோரும் ஏன் விஜயகாந்தை கொண்டாடுகிறார்கள்?.. அப்படி அவர் என்னதான் செய்தார்?!. வாங்க பார்ப்போம்!..

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.