Cinema News
கமல், விஜய், சூர்யா படங்களை காலி செய்த விஜயகாந்த்!.. கலெக்ஷன் கிங்காக இருந்த கேப்டன்…
தமிழ் திரையுலகில் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் நுழைந்து பல அவமானங்களை தாண்டி ஜெயித்து காட்டியவர் விஜயகாந்த். நம்பிக்கை, முயற்சி, உழைப்பு ஆகியவற்றை மட்டுமே நம்பி சினிமாவில் வளர்ந்தவர் இவர். நிறத்தை காட்டியும், அழகை காட்டியும் பலரும் அவரை நிராகரித்தனர்.
ஆனாலும், போராடி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் இராமநாராயணன் ஆகியோரின் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. தொடர்ந்து சண்டை காட்சிகள் அதிகமுள்ள படங்களில் நடித்து ஆக்ஷன் ஹீரோவாக மாறியவர் விஜயகாந்த்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் விஜயகாந்த்!.. முந்திக் கொண்ட சூர்யா.. இன்னும் விஜய்க்கு மனசு வரலையேப்பா?..
விஜயகாந்த் வளரும் காலத்தில் அவருடன் நடிக்க மறுத்தவர் ரஜினி. ஆனால், விஜயகாந்தின் சில திரைப்படங்கள் ரஜினி, கமல் படங்களை விட அதிகமாக வசூல் செய்தது பலமுறை நடந்துள்ளது. கிராமபுறங்களில் விஜயகாந்துக்கு ரசிகர்கள் அதிகம். தமிழகத்தின் எந்த குக்குராமத்திற்கு போனாலும் அங்கு விஜயகாந்த் ரசிகர் மன்ற போர்ட்டை பார்க்க முடியும்.
கமல், ரஜினி ஆகிய படங்களோடு விஜயகாந்த் படங்கள் பலமுறை வெளியாகி அந்த படங்களை விட அதிக வசூலை பெற்றிருக்கிறது. அதேசமயம் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ஒருபடம் கமல், விஜய், சூர்யா ஆகியோரின் படங்களை விட அதிக வசூலை பெற்றது பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.
இதையும் படிங்க: நம்பாத விஜயகாந்த்.. அவமானத்தை தாண்டி சாதித்து காட்டிய செல்வமணி.. மறக்க முடியாத புலன் விசாரணை…
2001ம் வருடம் தீபாவளிக்கு விஜயகாந்தின் தவசி, விஜய் நடித்த ஷாஜகான், கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான், பிரபுதேவா நடித்த மனதை திருடிவிட்டாய், சூர்யா நடித்த நந்தா ஆகிய படங்கள் ஒரேநாளில் வெளியானது. இதில், ஆளவந்தான் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல், சேதுவுக்கு பின் பாலா இயக்கிய படம் என்பதால் நந்தா படத்திற்கும் எதிர்ப்பார்ப்பு இருந்தது.
ஆனால், ஆளவந்தான் வசூலில் மண்ணை கவ்வ விஜயகாந்தின் தவசி படம் அதிக வசூலை பெற்றது. அடுத்த இடத்தில் ஷாஜகான், நந்தா, மனதை திருடிவிட்டாய் ஆகிய படங்கள் அமைந்தது., கமலின் ஆளவந்தான் படம் ஒரு தோல்வி படமாக அமைந்தது.
இதையும் படிங்க: சிறுமி கேட்ட ஏடாகூடமான கேள்வி!.. அசரவைக்கும் பதிலில் அசத்திய கேப்டன் விஜயகாந்த்…