Cinema News
ரஜினி மாறு வேஷத்தில் போய் பார்த்த சூர்யா படம்!.. என்ன சொன்னார் தெரியுமா?…
Rajini: பெரிய நடிகர்கள் ரசிகர்களை போல தியேட்டர்களுக்கு சென்று ஜாலியாக படம் பார்க்க முடியாது. ஏனெனில் ரசிகர்கள் கூடிவிடுவார்கள். ஆனால், சிம்பு, தனுஷ் போன்ற நடிகர்கள் அவரின் படங்கள் வெளியாகும்போது முதல்நாள் முதல் காட்சி சில குறிப்பிட்ட தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கமல்ஹாசன் எத்தனை வருடங்களுக்கு முன்பு தியேட்டருக்கு போய் ரசிகர்களுடன் படம் பார்த்தார் என்பது தெரியவில்லை. கடந்த பல வருடங்களாகவே ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் பிரிவ்யூ தியேட்டரில் மட்டுமே புதிய படங்களை பார்த்து வருகின்றனர். ஏனெனில், ரசிகர்கள் பிரச்சனையின்றி அங்கு படம் பார்க்க முடியும்.
இதையும் படிங்க: பாலச்சந்தருடன் முதல் சந்திப்பு!.. ரஜினி கேட்ட கேள்வி!.. நடிக்க வாய்ப்பு கிடைச்சது இப்படித்தான்!..
விஜய் போன்ற சில நடிகர்கள் வீட்டிலேயே ஒரு தியேட்டர் அமைப்பை வைத்திருக்கிறார்கள். அவர்கள் பார்க்க விரும்பும் படத்தை பார்க்க தயாரிப்பாளரே ஏற்பாடு செய்து விடுகிறார். கடந்த பல வருடங்களாகவே விஜய் இப்படித்தான் புதிய படங்களை பார்த்து வருகிறார். இப்போதும் அது தொடர்கிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினி இப்போது பிரிவ்யூ தியேட்டர்களிலும், சில சமயம் தனது வீட்டிலும் புதிய படங்களை பார்க்கிறார். ஆனால், சில வருடங்களுக்கு முன்புவரை மாறுவேஷத்தில் போய் தியேட்டரில் படம் பார்க்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை ரஜினி அப்படி பார்த்திருக்கிறார்.
இதையும் படிங்க: வாண்டடா போய் நடித்த ரஜினி!… 25 நாட்களில் உருவான மெகா ஹிட் திரைப்படம்..
கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த ‘காக்க காக்க’ திரைப்படத்தையும் அவர் அப்படித்தான் பார்த்தார். விக்ரம் நடித்து சூப்பர் ஹிட் அடித்த சாமி பட வெற்றிவிழாவில் பேசிய ரஜினி ‘சூர்யாவின் காக்க காக்க படத்தை மாறுவேஷத்தில் போய் தியேட்டரில் பார்த்தேன். படம் சிறப்பாக இருந்தது. சூர்யா சிறப்பாக நடித்திருந்தார்’ என ரஜினி அப்படத்தை பாராட்டியிருந்தார்.
பாபா படம் சரியாக ஓடாததால் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்த ரஜினி பாலச்சந்தருக்காக சாமி பட விழாவில் கலந்து கொண்டு பேசினார். சாமி படத்தில் நடித்த விக்ரமின் நடிப்பையும் ர்ஜினி பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஜினியின் கோபத்தால் சினிமாவில் நடிக்கவந்த விஜயகாந்த்!. இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கா?!..