Connect with us

Cinema News

ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கழட்டி விட்டாலும் தனுஷோட இந்த மனசு இருக்கே!.. பூரித்துப் போன ரசிகர்கள்!..

நடிகர் தனுஷ் மன்னன் ரஜினிகாந்தின் மாப்பிள்ளை என கெத்துக் காட்டி பாலிவுட்டில் அமிதாப் பச்சன் உடனே நடித்து வந்தார். உலகளவில் தனுஷின் புகழ் வெளிச்சத்துக்கு ரஜினிகாந்தின் மாப்பிள்ளை என்பதும் ஒரு பெரிய சப்போர்ட்டாக இருந்தது. தனுஷ் தயாரிப்பில் தனது மகளுக்காக காலா படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்தார் ரஜினிகாந்த் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காலையிலேயே முதல் ஆளாக நடிகர் தனுஷ் ”ஹேப்பி பர்த்டே தலைவா ரஜினிகாந்த்” என பிறந்தநாள் வாழ்த்தை எக்ஸ் தளத்தில் தெரிவித்து ரியல் ஃபேன் பாய் என்பதை நிரூபித்துள்ளார்.

இதையும் படிங்க: காப்பி அடிச்சாதான் 600 கோடி பாக்ஸ் ஆபிஸ் வருமா!.. அனிமல் படத்தின் அந்த சீனும் காப்பி தான்!..

ரஜினிகாந்தின் மருமகனாக இல்லை என்றாலும், என்றுமே பொல்லாதவன் தனுஷ் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் தான் என தனுஷ் ரசிகர்களும் ரஜினிகாந்த் ரசிகர்களும் தனுஷ் ட்வீட்டுக்கு கீழ் நன்றி கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 15ம் தேதி தான் கேப்டன் மில்லர் படத்தை வெளியிட தனுஷ் திட்டமிட்டு இருந்தார். ஆனால், சில பல போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் காரணமாக தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கலுக்கு தள்ளிப் போயுள்ளது.

இதையும் படிங்க: அடுத்த அலப்பறையை கிளப்பலாமா!.. தலைவர் 170 டைட்டில் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. கொண்டாட்டம் உறுதி!..

தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் மாமனார் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படமும் பொங்கல் விடுமுறைக்கு வெளியாக உள்ள நிலையில், பாக்ஸ் ஆபிஸில் சரியான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படமும் போட்டிப் போடும் நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3 படத்தில் பணியாற்றிய மூவரும் ஒரே நாளில் முட்டிக் கொள்ள காத்திருக்கின்றனர்.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top