Connect with us

Cinema News

வேட்டையன் படத்திலும் கழுகு!.. மீண்டும் விஜய்யை வம்புக்கு இழுக்கும் ரஜினிகாந்த்.. பிரபலம் பளிச்!

தலைவர் 170 படத்துக்கு வேட்டையன் என டைட்டில் வைக்கப்பட்ட நிலையில், லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் காட்டுக்கு வேட்டைக்கு சென்றவர்களை பற்றி கதை சொன்னதை வைத்தும் மீண்டும் காக்கா – கழுகு கதையை ரஜினிகாந்த் இழுத்து வந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலை வேட்டையன் படத்துக்கும் தேற்ற முடிவு செய்து விட்டார் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க வேண்டும் என்பதில் ரஜினிகாந்த் உறுதியாகி விட்டார். ஏனென்றால் ஜெயிலர் படத்தில் ராக்ஸ்டார் அனிருத் பண்ண சம்பவம் அப்படி.

இதையும் படிங்க: ஹீரோயின் ஆகப்போறாருன்னு வனிதா அக்கா சீன் போட்டாங்க!.. வெளியே போனதும் ஜோவிகா என்ன பண்றாங்க பாருங்க!..

காவாலா பாடல் டான்ஸ் ஆட போட்டாலும், ரஜினிக்கு தேவையான பாடலாக ஹுகும் மற்றும் களவாணி கண்ணைய்யா பாடல்களை அனிருத் கொடுத்த விதம் ரஜினிக்கு ரொம்பவே பிடித்து விட்டது.

வேட்டையன் படத்தின் அறிமுக டீசரிலேயே எப்படியாவது கழுகை கொண்டு வர நினைத்த சூப்பர்ஸ்டாரின் ஆசையை கழுகு சவுண்ட் போட்டு அனிருத் கொண்டு வந்திருக்கிறார் என்றும் மீண்டும் காக்கா கழுகு பிரச்சனையை ஆரம்பித்து விஜய்யை சீண்ட தொடங்கி விட்டார் ரஜினிகாந்த் என செய்யாறு பாலு தனது புதிய வீடியோவில் பேசி புயலை கிளப்பியுள்ளார்.

இதையும் படிங்க: ஹனிமூன் டூர் ஸ்டார்ட்!.. புதுமாப்பிள்ளை ரெடின் கிங்ஸ்லி மனைவியோட செம மஜா பண்றாரே!..

லால் சலாம், வேட்டையன் என நேற்று ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்தடுத்து அப்டேட்களாக அடுக்கி ரஜினிகாந்த் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளனர்.

லியோ படத்தின் கிளைமேக்ஸில் விஜய் கழுகை வைத்து எப்படி டா இருக்க என சீன் வைத்த நிலையில், காக்காவுக்கு சோறு போடுவது போல கூட வேட்டையன் படத்தில் காட்சி இடம்பெற்றாலும் பெறும் என்கின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top