Connect with us

Bigg Boss

கமலுக்கே கட்டையை போட்ட பிக் பாஸ்!.. மிட் வீக்கில் நடந்த பரபர எவிக்‌ஷன்.. இந்த வாரமும் ஓட்டுப் போடலையா?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ள கமல்ஹாசன் தான் இதுவரை மக்களின் ஓட்டுக்களின் அடிப்படையில் போட்டியாளர்களை வெளியேற்றி வருகிறார். அதை தவிர்த்து சில நேரம் போட்டியாளர்கள் வாக்கவுட் செய்யும் நடைமுறைகளும் நடந்துள்ளன.

இந்த சீசனில் பிக் பாஸ் வீடு 2 ஆக பிளக்கப்பட்டதில் இருந்து ஏகப்பட்ட புதுமைகளை புகுத்த பிக் பாஸ் முயற்சித்து வருகிறது. கடந்த வாரம் மக்கள் ஓட்டுப் போடவில்லை என யாரையும் எலிமினேட் செய்யவில்லை.

இதையும் படிங்க: விரட்டி விட்ட அஜித்!.. விக்னேஷ் சிவனுக்கு வாழ்க்கை தந்த விஜய் பட தயாரிப்பாளர்.. தளபதி தான் சொன்னாரா?..

இந்நிலையில், இந்த வாரம் கமல் வருவதற்கு முன்னதாகவே பிக் பாஸே அனன்யா ராவை அதிரடியாக எலிமினேட் செய்து வெளியே அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதீப் ஆண்டனியின் வெளியேற்றத்துக்கு பிறகு மீண்டும் ஒரு மோசடியை இந்த சீசன் செய்திருக்கிறது என ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என சுவர் ஏறி குதித்து ரூல்ஸை மீறிய கூல் சுரேஷை தானே நியாயமாக மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியே அனுப்பி இருக்க வேண்டும் என்றும் அதை விட்டு ரீ என்ட்ரி கொடுத்த அனன்யா பாப்பாவை மீண்டும் மீண்டும் ஏன் எவிக்ட் செய்றீங்க பிக் பாஸ் என அவரது ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

இதையும் படிங்க: இது வேறமாறி வெற்றி!.. ஓடிடி தளத்தில் துவம்சம் பண்ண துணிவு.. இத்தனை கோடி பேர் பார்த்துருக்காங்களா!

கடந்த வாரம் தான் மக்கள் ஓட்டுப் போடவில்லை, அப்போது இப்படி மிட் வீக் எவிக்‌ஷன் வைத்து நிக்சனை வெளியே அனுப்பி இருக்கலாமே என்றும் இந்த வாரமும் மக்கள் ஓட்டுப் போடவில்லையா கமல் வருவதற்கு முன்னதாக ஏன் இந்த அவசரம் என்றும் இந்த வாரம் யாரை காப்பாற்ற இவர் பலியாடு ஆக்கப்பட்டுள்ளார் என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top