என்னது இது சிவாஜி இயக்கிய படமா? ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த அந்த படம் எதுனு தெரியுமா?

Published on: December 15, 2023
sivaji
---Advertisement---

Actor Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் யாரும் தொடக் கூட முடியாத அளவில் நடிப்பிற்கு ஒரு இலக்கணம் வகுத்து வைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சினிமாவில் நடிக்க வரும் இளம் தலைமுறை நடிகர்கள் ஒரு  முறை சிவாஜியின் ஏதாவது ஒரு படத்தை பார்த்தால் போதும்.

நடிப்பின் ஆழம் என்ன என்று தெரியும். அந்தளவுக்கு நடிப்பிற்காக எதையும் செய்ய துணிந்தவர் சிவாஜி கணேசன் . ஆரம்பகாலங்களில் பல நாடகங்களில் நடித்த சிவாஜி பராசக்தி என்ற படத்தின் மூலம் முதன் முதலாக சினிமாவில் அறிமுகமானார்.

இதையும் படிங்க: கோலிவுட்டின் அடுத்த தனுஷ் – ஐஸ்வர்யாவான ஆதிக் ரவிசந்திரன் – ஐஸ்வர்யா.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்..!

முதல் படமே சிவாஜியை யார் என இந்த உலகிற்கு நிரூபித்தது. கிட்டத்தட்ட 250 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் சிவாஜி. ஏகப்பட்ட வெற்றிப்படங்களை கொடுத்தாலும் சிவாஜி ஜெயலலிதா நடிப்பில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற திரைப்படமாக கலாட்டா கல்யாணம் திரைப்படம் அமைந்தது.

சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் எப்படி உருவானது என்பதில் சில சுவாரஸ்ய சம்பவம் அமைந்திருக்கிறது. 1965 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. அதனால் நம் வீரர்களுக்காக கலை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டித்தர வேண்டும் என சிவாஜியிடம் தமிழக அரசு கேட்டதாம்.

இதையும் படிங்க: டிராஸ்பரண்ட் உடையில் இலவச தரிசனம் தரும் ராஷி கண்ணா!.. ஜூம் பண்ணி கூலாகும் ரசிகர்கள்…

வெறுமனே ஆடல் , பாடல் நடத்தாமல் ஒரு நாடகம் போல போடலாம் என சிவாஜி நினைக்க சித்ராலயா கோபுவிடம் ஒரு நல்ல நாடக கதை எழுதி தரவேண்டும் என கேட்டிருக்கிறார். அது தான் கலாட்டா கல்யாணம். கதைப்படி சோம்பேறியான ஒரு தந்தைக்கு 4 மகள்கள். அவர்களுக்கு மாப்பிள்ளைக் கூட பார்த்து திருமணம் நடத்த முடியாத அளவுக்கு சோம்பேறியான தந்தை.

அதில் இரண்டாம் மகளின் காதலனை அழைத்து மற்ற மூன்று மகள்களுக்கும் மாப்பிள்ளை பார்த்துக் கொடுத்தால் என் மகளுடன் உனக்கு திருமணம் நடக்கும் என கூறும் அந்த தந்தை. இப்படி கதை முழுக்க நகைச்சுவை கலந்ததாகவே இருக்கும்.

இதையும் படிங்க: ரூமை விட்டு கொடுத்த அண்ணாமலை… கடைசியில் அவரையே குறை சொன்ன ஸ்ருதி..!

இந்த கதை சிவாஜிக்கும் பிடிக்கவே உடனே அதை நாடகமாக்கினார். நாடக மேடையில் இந்த கலாட்டா கல்யாணம் நாடகத்தை இயக்கி நடித்தது சிவாஜிதானாம். எப்படி யார் யார் எந்தெந்த கேரக்டர்? என்ன பேசவேண்டும்? எப்படி பேசவேண்டும் ? என அனைத்தையும் சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தாராம். ஆனால் படத்தை இயக்கியது சி.வி.ராஜேந்திரன்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.