Cinema History
சிகரெட்டுக்கு வந்த தடை!.. கறார் காட்டிய தயாரிப்பாளர்!.. நாகேஷ் செஞ்சதுதான் ஹைலைட்!…
பொதுவாக சினிமாவை பொறுத்தவரை படப்பிடிப்பு தளங்களில் ஏற்படும் எல்லா செலவுகளையும் தயாரிப்பாளர்தான் செய்வார். விஷயம் தெரியாத அல்லது முதல் படத்தை தயாரிக்கும் புதிய தயாரிப்பாளர் எனில் அவரின் கதி அவ்வளவுதான். தயாரிப்பு நிர்வாகிகளே பல லட்சம் ஆட்டையை போட்டு விடுவார்கள்.
பொய்க்கணக்கை எழுதி பல லட்சங்களை திருடி வீடு கட்டி தயாரிப்பு நிர்வாகிகளும் கோடம்பாக்கத்தில் இருக்கிறார்கள். ஒருபக்கம், சில இயக்குனர்களும் அதையே செய்வார்கள். ஒருபக்கம் கதாநாயகன், கதாநாயகிகளுக்கு நட்சத்திர ஹோட்டலில் இருந்து உணவு, ஜூஸ், ஸ்னேக்ஸ் என பல லட்சம் பில்லை தீட்டி விடுவார்கள்.
இதையும் படிங்க: சார்லி சாப்ளின் வேஷம்தான் உனக்கு சரி… அப்படி சொன்ன பாலசந்தரையே பயப்படவச்ச நாகேஷ்…
அதனால்தான் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் மட்டும் சினிமாவில் தாக்கு பிடிப்பார்கள். பல புதிய தயாரிப்பாளர்கள் ஒரு படத்தோடு ‘ஆளை விடுடா சாமி’ என ஓடி விடுவார்கள். படப்பிடிப்பு தளத்தில் ஹீரோ மற்றும் மற்ற நடிகர்கள் குடிக்கும் சிகரெட்டின் செலவு கூட தயாரிப்பாளர் தலையில்தான் விழும். சில நடிகர்கள் நட்சத்திர ஹோட்டலில் அடிக்கும் சரக்கு செலவையும் தயாரிப்பாளர் தலையில் கட்டுவார்கள். இது பல வருடங்களாக நடந்து வரும் விஷயம்தான்.
60களில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் குடிக்கும் சிகரெட்டு செலவை தயாரிப்பாளர் ஏற்க கூடாது என ஒரு தடையை தயாரிப்பாளர்கள் சேர்ந்து கொண்டு வந்தார்கள். அப்போது ஒரு படத்தில் நடித்து வந்த நடிகர் நாகேஷ் படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததும் தயாரிப்பு நிர்வாகியிடம் சிகரெட் கேட்டார். அவருக்கு அந்த தடை பற்றி தெரியவில்லை. எனவே, தடையை காரணமாக சொல்லி அவருக்கு சிகரெட் கொடுக்கப்படவில்லை.
இதையும் படிங்க: தியேட்டருக்கு வந்த சிக்கல்!.. நாகேஷ் சொன்ன முதலிரவு கதை!.. எம்.ஜி.ஆர் எடுத்த நடவடிக்கை!..
நாகேஷ் எதுவும் கோபப்படவில்லை. ‘அப்படியா?’ என கேட்டுவிட்டு அமைதியாக இருந்தார். சிறிது நேரம் கழித்து காட்சிகளை எடுக்க நாகேஷை தேடினால் அவர் அங்கு இல்லை. கிட்டத்தட்ட 2 மணி நேரம் கழித்து திரும்பி வந்தார். அவருக்காக மற்ற நடிகர்கள் காத்திருந்தனர். இதில், கோபமடைந்த இயக்குனர் ‘என்ன நாகேஷ். எங்க போனீங்க?.. உங்களுக்காக எல்லோரும் காத்துக்கிட்டு இருக்காங்க.. 2 மணி நேரம் வேஸ்ட்’ என கோபமாக கேட்டார்.
அவருக்கு பொறுமையாக பதில் சொன்ன நாகேஷ் ‘சார் நான் ஒரு செயின் ஸ்மோக்கர். இங்க சிகரெட் இல்லைன்னு சொல்லிட்டாங்க. எனவே, ஒரு வாடகை கார் எடுத்துகொண்டு சிகரெட் வாங்க போனேன். அப்புறம்தான் அந்த காருக்கு கொடுக்கவும் என்கிட்ட காசு இல்ல. அப்புறம் வீட்டுக்கு போய் கார் வாடகைகு காசு எடுத்து வந்தேன். அதனாலதான் லேட்’ என சொன்னார். இந்த விஷயம் தயாரிப்பாளருக்கு சொல்லப்பட, இந்த தடையே வேண்டாம் என சொல்லிவிட்டாரம். அந்த தயாரிப்பாளர் வேறு யாருமல்ல. ஏவி மெய்யப்ப செட்டியார்தான்.இப்படி ஒரே நாளில் சிகரெட் தடையை நாகேஷ் உடைத்து நொறுக்கிவிட்டார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை நக்கலடித்த நாகேஷ்.. படத்தின் மூலம் பதில் சொன்ன பொன்மன செம்மல்!..