மொத்த தில்லுமுல்லுக்கும் காரணமே இவர்தானா!… அமீர் விஷயத்தில் விளையாடிய பிரபலம்…

Published on: December 17, 2023
ameer
---Advertisement---

Ameer issue: என்னதான் சினிமாவில் ஒரு நல்ல நிலைமையில் இருந்தாலும் அவர்களும் பலவித பிரச்சினைகளை சந்தித்துதான் வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான பிரச்சினைதான் அமீர் ஞானவேல் பிரச்சினை. இந்த செய்தி பல நாட்களாக தொடர்ந்து பல சர்ச்சைகளை சந்தித்தவண்ணம் உள்ளது.

பருத்திவீரன் திரைப்படத்தின்போது ஆரம்பத்தில் அப்படத்தின் தயாரிப்பாளராக ஞானவேல்ராஜாதான் இருந்துள்ளார். ஆனால் பின் சில காரணங்களால் அவர் அப்படத்தை தயாரிக்கும் பொறுப்பிலிருந்து விலகிவிட்டதாகவும் அதன்பின் அமீர்தான் பல இடங்களில் கடன் வாங்கி அப்படத்தை முடித்ததாகவும் அமீரே தெரிவித்திருந்தார்.

இதையும் வாசிங்க:ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஜெயலலிதா! அப்படி என்னத்தான் இவங்களுக்கு பிரச்னை தெரியுமா..?

மேலும் இந்த பிரச்சினையில் அமீருக்கு ஆதரவாக சமுத்திரக்கனி மற்றும் நடிகர் சசிகுமார் பேசி வீடியோ வெளியிட்டிருந்தனர். ஞானவேல் ராஜா படத்திலிருந்து விலகியபின் சமுத்திரகனிதான் சசிகுமார் போன்ற தனக்கு பழக்கமாவர்களிடமிருந்து கடன் வாங்கி அமீருக்கு கொடுத்ததாக சமுத்திரக்கனி தெரிவித்திருந்தார்.

paruthiveeran

மேலும் அப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர் அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதியின் பெயரை தவறாக உபயோகித்து அமீரிடம் இருந்து அப்படத்தை ஞானவேல்ராஜா தரப்பு எழுதி வாங்கியுள்ளது. இப்படி அப்படத்தில் நடந்த அனைத்து தகவல்களும் சமூக வலைதளங்களில் உலாவின.

இதையும் வாசிங்க:அமீர் வாயை அடைக்கணும்… ஆதரவு தரும் பிரபலங்களிடம் நடக்கும் பேரம்.. அதிர்ச்சி தந்த விமர்சகர்..!

ஆனால் அது குறித்து கார்த்தி தரப்பு எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை. அவர்களது தந்தையான சிவக்குமாரும் கூட எதுவும் கூறவில்லை. ஆனால் இந்த மொத்த பிரச்சினைகளுக்கும் பின் சிவகுமார்தான் இருப்பதாக பத்திரிக்கையாளர் சுபைர் தெரிவித்துள்ளார்.

Sivakumar
Sivakumar

சிவகுமார் நினைத்தால் இந்த விஷயத்தை சரிசெய்யலாம் எனவும் ஆனால் ஞானவேல்ராஜாவை கருவியாக உபயோகப்படுத்தியதே சிவக்குமார்தான் எனவும் அவர் குற்றச்சாட்டினை வைத்துள்ளார். அப்போதைய முதல் கருணாநிதியின் பெயரை சொல்லி அமீரை மிரட்டியது ஞானவேல் ராஜாவாக இருக்க வாய்ப்பில்லை. முழுக்க முழுக்க இந்த பிரச்சனைக்கு பின்னால் இருந்தது சிவக்குமார் மட்டுமே. அதனால்தான் அவர் இப்போதுவரை எதுவுமே சொல்லாமல் இருக்கிறார்’ என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க:பாக்கியராஜை சும்மாவே விடக்கூடாது!… கொந்தளிக்கும் பிரபல இயக்குனர்… காரணம் தெரியுமா?..

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.