Cinema History
ஓடாதுனு நினைச்ச இயக்குனர்.. நடிப்பால் ஓடவைத்த சிவாஜி கணேசன்… அட அந்த படமா?!..
Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இருந்தாலும் ஒரு சில நடிகர்கள் அவர்கள் காலத்தை தாண்டியும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பார்கள். அந்த வகையில் தனது நடிப்பினால் தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
இவர் நடித்த முதல் திரைப்படமான பராசக்தி திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இவரின் திரைப்படங்கள் அந்த கால மக்களால் மட்டுமல்லாமல் இந்த கால மக்களுக்கு மிகவும் விருப்பமான படங்களாக அமைந்திருக்கின்றன. மேலும் இவர் பாசமலர், தெனாலி ராமன், கெளரவம் போன்ற திரைப்படங்கள் இவருக்கு வெற்றியை பெற்று தந்தன.
இதையும் வாசிங்க:நடிகரை சரக்கடிக்க வச்சி மாட்டிவிட்ட சந்திரபாபு!.. கடுப்பான எம்ஜிஆர்.. படப்பிடிப்பில் நடந்த களேபரம்..
இவர் நடித்த திரைப்படங்களில் ஒன்றுதான் படிக்காத மேதை. இப்படத்தை இயக்குனர் பீம்சிங் இயக்கியிருந்தார். பொதுவாக ஒரு திரைப்படத்தின் வெற்றியை கணிப்பவர் இயக்குனர் பஞ்சு அருணாச்சலம். அவர் ஆரம்பத்தில் கண்ணதாசனிடம் கதாசிரியராக இருந்துள்ளார். அப்போது அவர் பல இயக்குனர்கள் கண்ணதாசனிடம் கூறும் கதைகளை கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அப்படி பலர் கூறும் கதைகளை கேட்கும்போதே அப்படம் வெற்றியை சந்திக்குமா என்பதை முன்கூட்டியே கணித்து விடுவாராம். ஆனால் அவரால் கணிக்க முடியாத ஒரு திரைப்படம் என்றால் அது சிவாஜி கணேசன் நடித்த ‘படிக்காத மேதை’ திரைப்படம்தான் என்பதை அவரே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிங்க:தன்னை நடுத்தெருவில் நிறுத்திய சந்திரபாபுவுக்கு கண்ணதாசன் செய்த உதவி!. அட பெரிய மனசுதான்..
பஞ்சு அருணாச்சலத்தை பொருத்தவரை அப்படம் பெரிய அளவில் வெற்றிப்பெறாது என நினைத்துள்ளார். ஆனால் அப்படம் சிவாஜிக்கு மிகப்பெரிய வெற்றியை சந்தித்து கொடுத்தது. பஞ்சு அருணாச்சலத்தை போலவே இயக்குனர் ஸ்ரீதரும் அப்படத்தை வெற்றி அடையாது என நினைத்துள்ளார்.
ஆனால் சிவாஜி தனது நடிப்பு திறமையால் அப்படத்தில் உள்ள குறைகள் அனைத்தையுமே போக்கியுள்ளார் என பஞ்சு அருணாச்சலமே குறிப்பிட்டுள்ளார். இப்படி இரு ஜாம்பவான்கள் கணித்த அப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததற்கு சிவாஜியே காரணம்.
இதையும் வாசிங்க:கடுப்பில் கத்திய விஜய்… சபதம் எடுத்த பிரபல நடிகர்… எந்த படத்துலனு தெரியுமா?…