போண்டா மணியின் மொத்தக் கடனையும் தீர்த்த விஜயகாந்த்! இந்த நிலைமையிலும் கேப்டன் செஞ்ச உதவி

Published on: December 27, 2023
bonda
---Advertisement---

Actor Bondamani:  நடிகர் போண்டா மணியின் இறப்பு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஒரு வருடமாக சிறுநீரக பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்த போண்டாமணி அடிக்கடி டையாலிஸும் செய்து வந்தார்,

ஒரு கட்டத்தில் அவருக்கு மருத்துவ செலவுக்குக் கூட காசு இல்லாமல் இருந்த பொழுது குறிப்பிட்ட சில நடிகர்கள் ரஜினி, தனுஷ், விஜய் சேதுபதி இவர்கள்தான் பண உதவி செய்துள்ளனர். நடிகர் சங்கம் சார்பாகவோ மற்ற உதவிகளோ அவரை சென்றடைய வில்லை.

இதையும் படிங்க: இந்தியாவின் மைக்கேல் ஜாக்சனா இப்படியா? பிரபுதேவாவால் கடுப்பான ரோஜா நடிகை

இந்த நிலையில் போண்டாமணிக்கு சுமார் 12 லட்சம் கடன் இருந்ததாம். அந்த மொத்தக் கடனையும் விஜயகாந்த் தான் தற்போது தீர்த்து வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. விஜயகாந்தின் புரடக்‌ஷனில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார் போண்டாமணி.

அவரின் மறைவு கேட்டு விஜயகாந்த் கண்ணீர் விட்டதாகவும் அந்த செய்தி தாங்க முடியாமல் அவர் தடுமாறி எழூந்ததாகவும் விஜயகாந்தின் பி.ஏ. கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் விஜயகாந்தை பார்க்க ஒரு சமயம் அவரது கட்சியினர் திரண்டு போயிருந்தார்களாம்.

இதையும் படிங்க: சேதுபதி ஐபிஎஸ் படத்தில் ஒரு காட்சிக்காக 18 நாட்கள் ஷூட்டிங்.. கேப்டன் விஜயகாந்தே சொன்ன ரகசியம்…!

அவர்களுடன் போண்டாமணியும் விஜயகாந்தை பார்க்க சென்றாராம். போண்டாமணி வந்த செய்தியை விஜயகாந்தின் உதவியாளர் கேப்டனிடம் சொல்ல போண்டாமணியை மட்டும் உள்ளே வரச் சொல் என்று சொல்லியிருக்கிறார்.

ஏனெனில் அவர்கள் கட்சிக் காரர்கள். சமீபத்தில் இணைந்தவர்கள். நாம் கலைஞர்கள். அதனால்தான் உன்னை முதலில் வரச் சொன்னேன் என அந்த சமயமும் 5000 செக் கொடுத்து அனுப்பிவைத்தாராம் விஜயகாந்த். இப்பொழுதும் போண்டாமணியின் நிலைமை மற்றும் அவரது குடும்ப சூழ் நிலை அறிந்து கேப்டன் செய்த உதவி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.

இதையும் படிங்க: சிவாஜிக்கு வாக்கு கொடுத்த ஜெய்சங்கர்!.. கடைசி வரை செய்ய முடியலையே!…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.