அறியாமை அவன ரொம்ப நல்லவனாக்கிடுச்சு! கேப்டன் மறைவால் கதறி அழும் ராதாரவி..

Published on: December 28, 2023
radha
---Advertisement---

Actor Radharavi:  இன்று ஒட்டுமொத்த தமிழக மக்களையும் மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ள செய்தி நடிகரும் கேப்டனுமான விஜயகாந்தின் மரணச் செய்திதான். கடந்த சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த விஜயகாந்துக்கு அவ்வப் போது மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.

சமீபத்தில் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் மூன்று நாள்கள் மருத்துவமனையில் இருந்தார். அதன் பின் திரும்பி வந்து பிரேமலதாவை பொதுச்செயலாளராக்கி அழகு பார்த்தார் கேப்டன். அந்த சமயத்தில்தான் மக்களை சந்தித்தார்.

இதையும் படிங்க: அவமானங்களை தாண்டி வளர்ந்த விஜயகாந்த்!.. கேலி செய்தவர்கள் முன் ஜெயித்து காட்டிய கேப்டன்…

அதன் பின் மீண்டும் நேற்று அவருக்கு தொற்று ஏற்பட்டு நுரையிரலில் சுவாசக் கோளாறு ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கேப்டன் இன்று அதிகாலை நம்மை விட்டு நீங்கிச் சென்றார்.

இந்த நிலையில் விஜயகாந்தின் ஆருயிர் நண்பரும் நடிகருமான ராதாரவி விஜயகாந்தின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்ததோடு செய்தியாளருக்கு பேட்டியும் கொடுத்தார். அதில் அவர் கூறியதாவது அறியாமை அவனை ரொம்ப நல்லவனாக்கிடுச்சு. அதனால்தான் இத்தனை கோடி ரசிகர்களின் அலறல் சத்தமும் கேட்கிறது.

இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. அரசு மரியாதையும் அறிவிப்பு!..

தீர்ப்பு என் கையில் படத்தில் இருந்தே நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அதன் பின் இருவரும் சேர்ந்து ஏராளமான படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறோம். அவன் அரசியலுக்கு வந்த பிறகுதான் எங்களுக்குள் இருந்த நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது.

அவனை நான் விஜி என்று செல்லமாக அழைப்பேன். எனக்கு இப்போது காலில் ஆப்ரேஷன் செய்திருக்கிறேன். எளிதில் நடக்க முடியாத நிலையில்தான் இருக்கிறேன். எனக்கு ஒன்றுனா முதல் ஆளாக ஓடி வந்து நிற்பவன் விஜி என சொல்லி கதறி அழுதார் ராதாரவி.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.