Cinema News
எம்ஜிஆர் மீது எந்தளவு பற்று கொண்டவர் கேப்டன்! அதற்கு ஒரு உதாரணமான சம்பவம் இதோ
Captain Vijayakanth: யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு இழப்பாக விஜயகாந்த் இன்று நம்மை விட்டு சென்றதுதான். ஒட்டுமொத்த ரசிகர்களையும் தமிழக மக்களையும் மீளாத்துயரில் விட்டுச் சென்றிருக்கிறார். விஜயகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது எம்ஜிஆர் தான்.
எம்ஜிஆரின் படங்களை பார்த்து பார்த்து சினிமா மீது அதிக ஆர்வம் கொண்டு இந்த திரைத்துறைக்கு வந்தவர்தான் விஜயகாந்த்.இவர் செய்த உதவிகள் ஏராளம். ஆனால் அது வெளியில் தெரிவதில்லை. இதற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்ததும் எம்ஜிஆர்தான்.
இதையும் படிங்க: தியேட்டரில் செம அடி போல!.. அதிரடியாக ஓடிடிக்கு வரும் பிரபாஸின் சலார்.. அதுவும் இவ்ளோ சீக்கிரமா?
யார் தேடி வந்தாலும் முதலில் வந்தவர்களுக்கு உணவளித்த பிறகே அவர்களிடம் உரையாடுவதை வழக்கமாக கொண்டார். இதுவும் எம்ஜிஆரை பின்பற்றியே அவர் செய்த நல்ல செயல்களில் ஒன்று. எம்ஜிஆருக்கு பின் பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர்.
ஆனால் எம்ஜிஆரை அடுத்து அரசியலில் அதிக மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். எம்ஜிஆர் நடித்த ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’ படத்தை 80 முறை பார்த்ததாக ஒரு சமயம் பேட்டியில் விஜயகாந்தே கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: புது வீடு… மகனின் திருமணம்.. விஜயகாந்துக்கு நிறைவேறாமல் போன ஆசைகள்..
இந்த ஒரு சம்பவமே அவர் எம்ஜிஆர் மீது எந்தளவு அன்பு வைத்திருந்தார் என்பதற்கு உதாரணம். அதனாலேயே அவரை கருப்பு எம்ஜிஆர் என்று மக்கள் அழைக்க ஆரம்பித்தனர். இதற்கேற்ற வகையில் எம்ஜிஆர் இறந்த அதே மாதம், அதே கிழமையில் விஜயகாந்த இறந்திருப்பது இன்னும் ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது.
எம்ஜிஆரின் புரட்சித்தலைவர் என்ற பெயரிலிருந்து புரட்சியையும் கலைஞர் கருணாநிதியின் பெயரிலிருந்து கலைஞரையும் சேர்த்து புரட்சிக்கலைஞர் என்று வைத்துக் கொண்டார் என்றால் எம்ஜிஆர் மீதும் கலைஞர் மீதும் அவர் அதிகளவு மரியாதையும் அன்பும் வைத்திருந்தார்.
இதையும் படிங்க: இவரா சார் வில்லன்?!.. விஜயகாந்தின் உடலை விட்டு நகராமல் நிற்கும் மன்சூர் அலிகான்..