Cinema News
கேப்டனா நீ? விஜயகாந்தை மோசமாக விமர்சித்த வடிவேலு.. அவர் மக்கள் பலம் இப்ப தெரிஞ்சி இருக்குமே… நீங்க பேசலாமா?
Vijayakanth: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வள்ளலாகவே இருந்த விஜயகாந்த் நிறைய விமர்சனங்களை சந்தித்தது என்னவோ அரசியலுக்கு வந்த பின்னர் தான். ஆனால் அதிலும் அவருக்கு பெரிய பலமே இருந்தது. அப்படி ஒரு தேர்தலில் வடிவேலு பேசிய பழைய வீடியோ வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில் வடிவேலு, திமுக கட்சிக்கூட்டத்தில் பேசி இருப்பார். நீயெல்லாம் கேப்டனா? தண்ணிக்கு மேல நின்னு வேலை செய்றவன் தான் கேப்டன். எப்பையுமே தண்ணில நிற்கிறவன் கேப்டன் இல்லை. நீ கிங் மேக்கரா, உனக்கு ட்ரிங் மேக்கர் என்று தான் பெயர் வச்சிருக்கணும். உன்னால ஒழுங்கா நிற்கவே முடியாது என இன்னும் படு மோசமாக பேசி இருப்பார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், மாமன்னன் படம் மூலம் கொஞ்சமாக மீட்டெடுத்த பெயர் மீண்டும் வடிவேலுவுக்கு காலியாகி வருகிறது.
இதையும் படிங்க: செருப்பை தூக்கி வீசி எறிந்த ரசிகர்கள்! அஞ்சலி செலுத்த வந்த விஜய்க்கு நேர்ந்த விபரீதம் – வைரலாகும் வீடியோ
அதிலும், அவர் பேசிய வீடியோவில் அனைவர் சிரித்தாலும் கருணாநிதி கடுகடுத்த முகத்துடனே பார்த்து கொண்டு இருப்பார். அவர் அனுபவத்துக்கு இந்த வார்த்தையை அவர் விரும்பவில்லை என்றே சொல்லலாம். தற்போது விஜயகாந்தின் மரணம் தமிழகத்தை உலுக்கி இருக்கும் நிலையில், மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டு இருக்கிறது அவரின் முகத்தினை கடைசியாக பார்க்க. பிரியாவிடை கொடுக்க பிரபலங்கள் வந்து கண்ணீர் விட்டு செல்கின்றனர்.
வாழ்ந்த போது கூட அவரை குணத்தை பற்றி தப்பாக எந்த பேட்டிகளுமே இல்லை. இதுவே வடிவேலுவை குறித்து அவருடன் பணியாற்றிய பலரும் மோசமான அனுபவங்களையே பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர். அதிலும் சமீபத்தில் காதல் சுகுமார் தன்னை வடிவேலு அடித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தது. தனக்கு நல்லது செஞ்ச விஜயகாந்தையே மோசமாக ஏசிய வடிவேலுவை ரசிகர்கள் தற்போது விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வசமா மாட்டிக்கொண்ட பாக்கியலட்சுமி இயக்குனர்… என்னத்தை சொல்றாருனு தான் பார்ப்போமே!
அவரை பத்தி நீங்க சொல்லலாமா? இன்னைக்கு அவர் இறப்புக்கு நாடே அழுகிறது. நிறைய வருடம் அரசியலில் இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதிக்கு கிடைத்த அதே பிரியாவிடையை மக்கள் அவருக்கு கொடுத்து வருகின்றனர். இப்போ தெரியுதா அவரின் மக்கள் பலம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.