Cinema News
அவர் கண்டிப்பா நடிக்கணும்!.. அவ்வளவு திட்டியும் வடிவேலுவுக்காக பேசிய விஜயகாந்த்…
Vijayakanth: நடிகர் விஜயகாந்த் மரண செய்தி எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இதுவரை அவரை பற்றி தெரியாத பல விஷயங்கள் வெளியே வந்து கொண்டிருக்கிறது. திரையுலகை சேர்ந்த பலரும் அவர்களுக்கு விஜயகாந்துடன் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் வடிவேலுவை திரையுலகம் நிராகரித்தபோது சின்னகவுண்டர் படத்தில் நடிக்க வைத்து அவரை வளர்த்துவிட்டவர் விஜயகாந்த். வடிவேலுவுக்கு போட்டுக்கொள்ள உடை கூட இல்லாததை தெரிந்துகொண்டு அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திலேயே அவருக்கு வேஷ்டி, சட்டைகளை வாங்கி கொடுத்தார் விஜயகாந்த்.
இதையும் படிங்க: கேப்டனா நீ? விஜயகாந்தை மோசமாக விமர்சித்த வடிவேலு.. அவர் மக்கள் பலம் இப்ப தெரிஞ்சி இருக்குமே… நீங்க பேசலாமா?
ஆனால், பின்னாளில் முன்னணி காமெடி நடிகராக வளர்ந்த வடிவேலு சில காழ்ப்புணர்ச்சி காரணமாக விஜயகாந்தை திட்டுவதற்காகவே திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யப்போன வடிவேலு விஜயகாந்தை அவ்வளவு அசிங்கமாக பேசினார். அவன், இவன் என்றெல்லாம் பேசினார். ஆனால், அதே தேர்தலில் திமுகவை விட அதிக இடங்களில் வெற்றிபெற்று எதிர்கட்சி தலைவராகவும் விஜயகாந்த் அமர்ந்தார்.
விஜயகாந்தை கடுமையாக விமர்சித்ததால் வடிவேலுவை திரையுலகமே ஒதுக்கியது. ஒருபக்கம், ரெட் கார்டு காரணமாகவும் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. எனவே, 4 வருடங்கள் சினிமாவில் நடிக்காமலேயே வடிவேலு இருந்தார். வடிவேலுவுடன் பல கமெடி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: வாழ்ந்தவர் கோடி.. என்றும் மனதில் இருப்பார் விஜயகாந்த்!.. கண்கலங்கி அஞ்சலி செலுத்திய ரஜினி….
அவர்களில் ஒரு நடிகர் சுப்பாராஜ். இவர். ஒருமுறை விஜயகாந்தை பார்க்க சென்றுள்ளார். அப்போது ‘வடிவேலு உன் நண்பர்தானே.. ஏன் அவர் இப்போது சினிமாவில் நடிப்பதில்லை?’ என விஜயகாந்த் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் ‘எதுக்குண்ணே இப்படி கேட்குறீங்க?’ என கேட்க, விஜயகாந்தோ ‘வடிவேலு ஒரு நல்ல நடிகர். அவர் நடிக்காமல் இருக்கக் கூடாது’ என சொனனாராம்.
தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை மோசமாக வடிவேலு விமர்சித்த போது ‘வடிவேலுவை யாரும் விமர்சித்து பேசக்கூடாது’ என கட்டளையிட்டார் விஜயகாந்த். அதேபோல் வடிவேலு நடிக்காமல் இருந்தபோது ‘அவர் நடிக்காமல் இருக்கக் கூடாது’ என்றும் அவருக்காக பேசியிருக்கிறார் எனில் அதுவே அதுவே விஜயகாந்தின் உயர்ந்த குணத்தை காட்டுகிறது.
இதையும் படிங்க: எம்ஜிஆர் மீது எந்தளவு பற்று கொண்டவர் கேப்டன்! அதற்கு ஒரு உதாரணமான சம்பவம் இதோ