Cinema History
திடீரென தேவைப்பட்ட பாட்டு!.. மேஜிக் செய்த இசைஞானி!. ஒரே நாளில் எடுக்கப்பட்ட ரஜினி பாட்டு!..
70களின் இறுதியில் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது இசைப்பயணத்தை துவங்கியவர்தான் இளையராஜா. இவரின் முதல் படமான அன்னக்கிளி-யில் ராஜா போட்ட பாட்டுக்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்து, ‘அட யார் இந்த இசையமைப்பாளர்?’ என ஆச்சர்யப்பட வைத்தது.
அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் ராஜாவின் இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. 80களில் இசையுலகில் முடிசூடா மன்னனாக இருந்தார் இளையராஜா. அவரை நம்பியே பல திரைப்படங்கள் உருவானது. ஹீரோவின் கால்ஷீட்டை விட இளையராஜாவைத்தான் முதலில் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்தனர்.
இதையும் படிங்க: அம்மாடியோவ் இவ்ளோ சொத்துக்களுக்கு அதிபதியா கேப்டன்? கேட்டா வாயடைச்சு போய்டுவீங்க
இளையராஜாவின் இசையை நம்பியே பல இயக்குனர்கள் படங்களை எடுத்தனர். இளையராஜாவும் பல படங்களை தனது இசையால் ஓடவைத்தார். சிறப்பான, இனிமையான பாடல்களை கொடுத்து படங்களை ஓட வைத்தது ஒருபுறம் என்றாலும், ஒருபக்கம் ஒரு நாளில் இரண்டு, மூன்று படங்களுக்கு ராஜா இசையமைத்துவிடுவார்.
80களில் பல வெற்றிப்படங்களை கொடுத்து பெரிய இயக்குனராக இருந்தவர் ராஜசேகர். இவரின் இயக்கத்தில் ரஜினி, சிவாஜி, அம்பிகா என பலரும் நடித்த திரைப்படம்தான் படிக்காதவன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து எல்லா வேலையும் முடிந்து படம் ரெடியாகிவிட்டது. ரிலீஸுக்கு ஒன்னும் ஒரு வாரம்தான் இருந்தது.
இதையும் படிங்க: இந்த படத்துக்கு விஜயகாந்த் வேண்டாம்!.. இயக்குனரிடம் மோதி ஹிட் படத்தை மிஸ் பண்ண ஏவிஎம்!..
படத்தை பார்த்த இயக்குனர் ராஜசேகர் தனது தம்பியால் ஏமாற்றப்பட்டதை ரஜினி உணரும் அந்த காட்சியில் ஒரு பாட்டு இருக்க வேண்டும் என சொல்லிவிட்டார். கதாசிரியர் பஞ்சு அருணாச்சலமும் அதே கருத்தை சொல்லிவிட்டார். ஆனால், பாடலும் கையில் இல்லை. அதேபோல், ரஜினி, அம்பிகா இருவரும் மும்பையில் வேறு படத்தின் படப்பிடிப்பில் இருந்தனர்.
இளையராஜாவிடம் இதை சொல்லி காலையில் பாடல் கம்போஸ் செய்து மதியம் ஒலிப்பதிவு செய்து அன்று இரவே படப்பிடிப்பு என முடிவானது. ரஜினியும், அம்பிகாவும் வந்துவிட அன்று இரவே பாடலுக்கான ஷூட்டிங்கை நடத்தினார். அப்படியே உருவான பாடல்தான் ‘ஊரை தெரிஞ்சிக்கிட்டேன்.. உலகம் தெரிஞ்சிக்கிட்டேன்’ பாடலாகும். வைரமுத்து பாடல் எழுதி யேசுதாஸ் பாடிய அந்த பாடல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாடலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீண்டும் திரையில் விஜயகாந்த்!.. விரைவில் வெளியாகும் ஊமை விழிகள் 2.. குட் நியூஸ் சொன்ன இயக்குனர்…