விஜயகாந்துக்கு இப்படி ஒரு நம்பிக்கை இருந்ததா?!. மனுஷன் பச்ச புள்ளையா இருந்திருக்காரே…

Published on: January 4, 2024
vijayakanth
---Advertisement---

Vijayakanth: தமிழ் சினிமாவில் நிறத்துக்கும் திறமைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என நிரூபித்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் ஆரம்பத்தில் பல இயக்குனர்களாலும் தயாரிப்பாளர்களாலும் நிராகரிக்கப்பட்டவர். இருந்தாலும் தான் சினிமாவில் நடித்தே ஆக வேண்டும் எனும் ஆசையில் தொடர்ந்து பல முயற்சிகள் செய்து சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தார்.

சினிமாவினால்தான் தான் பணம் பெற வேண்டும் எனும் கட்டாயம் இல்லாதவர். மதுரையை சேர்ந்த இவர் தனக்கு இருந்த வசதிக்கு எந்தவொரு வேலைக்கும் செல்ல வேண்டும் எனும் அவசியமே இல்லாதவர். அந்த அளவுக்கு வசதி படைத்தவர் விஜயகாந்த்.

இதையும் வாசிங்க:அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு!.. 2ம் திருமணம் முடிந்த கையோடு அம்மாவான அமலா பால்!..

ஆனால் சினிமாவில் நடித்தே ஆகவேண்டும் எனும் எண்ணத்தில் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இவர் இனிக்கும் இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் புலன் விசாரணை, ஊமை விழிகள் போன்ற பல திரைப்படங்களின் மூலம் சினிமாவில் தனக்கென தனி அந்தஸ்தை பெற்றார்.

பின் அரசியல் மீது ஆர்வம் கொண்ட இவர் தனது திரைப்படங்களின் மூலம் பல விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினார். பின்னர் அரசியலுக்கு வந்த விஜயகாந்துக்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. தொடர்ந்து பல பிரசாரங்களில் கலந்து கொண்டு மக்கள் தொண்டாற்றினார். இல்லை என வருபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்தவரும் கூட.

இதையும் வாசிங்க:நான் சாகுறதுதான் சரி!. பிரேமலதாவிடமே சொன்ன விஜயகாந்த்… இது எப்ப நடந்தது தெரியுமா?!..

பின்னர் இவரது உடல்நிலையில்  தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டதால் சமீபத்தில் உயிரிழந்தார். இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் வந்தனர். இந்நிலையில் பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகரான இளவரசு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜயகாந்த் பற்றிய சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார்.

Ilavarasu
Ilavarasu

பொதுவாக கேப்டன் என்றாலே குழந்தை மனம் கொண்டவர். ஆனால் அவருக்கு ஒரு வித்தியாசமான நம்பிக்கை இருந்ததாம். ஒரு நாள் இளவரசு கேப்டனை சந்தித்தபோது அவர் கையில் பல் துலக்கும் பிரஷை வைத்துள்ளார். அதை வைத்து வேகமாக பல் துலக்குங்கள் என கூறியுள்ளார். ஏனென்று கேட்ட இளவரசுவிடம் ‘வேகமாக பல் துலக்கினால் நன்றாக பசிக்கும்’ என கூறினாராம் விஜயகாந்த். குழந்தை மனம் கொண்ட கேப்டனுக்கு இப்படி ஒரு நம்பிக்கையும் இருந்ததாம்.

இதையும் வாசிங்க:விஜயகாந்துக்கு நடந்த அந்த ஆபரேஷன்தான் காரணம்!.. முதன் முறையாக வாய் திறக்கும் பார்த்த சாரதி..

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.