Connect with us

Cinema News

ஸ்டேஜில் இந்த பெர்ஃபாமன்ஸ் தேவையா!… நல்லா பண்ணுறீங்க மில்லர் ஐயா! மொக்கை பண்ணிய பிரபலம்!

Dhanush: காதல் கொண்டேன் படத்தின் மூலம் ஹிட் நாயகனாக மாறிய தனுஷின் கேரியர் கிராப் இன்று உச்சத்தில் இருக்கிறது. ஒரு பக்கம் நடிப்பு இன்னொரு பக்கம் இயக்கம் என பரபரப்பாக சுற்றி வருகிறார். ஆனால் சில விஷயத்தில் கோட்டை விட்டு ரசிகர்களிடம் ட்ரோல் மெட்டிரியலாகவும் மாறி விடுகிறார்.

தமிழ்சினிமாவின் புரட்சி கலைஞர் விஜயகாந்த் சமீபத்தில் இறந்து இருந்தார். அவரின் இறுதி அஞ்சலிக்கு நிறைய டாப் நடிகர்கள் மிஸ் ஆகிவிட்டனர். அதில் பலர் காரணத்தை சொன்னாலும் கூட ரசிகர்கள் அவர்களை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விடாமுயற்சி படக்குழுவுக்கு கொடுத்த ஷாக்கை ஏற்கனவே தன்னுடைய ஹிட் இயக்குனருக்கும் அஜித் கொடுத்திருக்கிறாராம்?

இந்த லிஸ்டில் தனுஷும் உண்டு. ஆனால் அவர் ஷூட்டிங்கில் இருந்ததாக கூறப்படுகிறது. இருந்தும் ரசிகர்களால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனால் அதை தனுஷ் தரப்பு கண்டுக்கொண்டதாக தெரியவில்லை. இதையடுத்து சமீபத்தில் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா நடந்தது.

அந்த நிகழ்ச்சியில் தனுஷ் பேசும்போது கண்ணுக்கொரு வண்ணக்கிளி, காதுக்கொரு கானக்குயில் நீதானயா என்ற பாடலை கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தி இருந்தார். இதுதான் தற்போது மற்றுமொரு சர்ச்சைக்கு வழி வகுத்து இருக்கிறது. இதை கிண்டல் செய்யும் விதமாக புளூசட்டை மாறன் ஒரு ட்வீட்டை போட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: அண்ணனை போல யாரும் இல்ல! விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா! வைரலாகும் புகைப்படம்

தனுஷின் அக்கா மருத்துவ சீட்டுக்கு அழைந்தார். நேரில் வரணும் தானே என ஒரு கூட்டமும் வாராதவங்களை நம்ம கட்டாயப்படுத்த முடியாது. நீங்க கேப்டன் மில்லர் ரிவியூ செய்யாதீங்க என ஒரு கூட்டமும் மாறி மாறி கமெண்ட்டை தட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema News

To Top