Cinema News
இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எப்படி வருவாரு? அஜித் பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம்
Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார் அஜித். தான் உண்டு தன் வேலை உண்டு என அஜித் இருந்தாலும் பிரச்சினை அவரை விடுவதாக இல்லை.
பொதுவாக எந்தவொரு பொது விழாக்களிலும் இடங்களுக்கும் செல்வதில்லை அஜித் என அனைவருக்கும் தெரியும். விஜயகாந்த் மறைவிற்கு வராத அஜித் அவர் நினைவிடத்திற்கு கூட இன்னும் வந்த அஞ்சலி செலுத்தவில்லை. வெளி நாடுகளில் இருக்கும் மற்ற நடிகர்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக வந்த அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: கோட் படத்துக்கு ரிலீஸ் செய்தியை லாக் செய்த படக்குழு!.. கல்லா கட்டுமா தளபதி 68!..
ஆனால் அஜித் இதுவரை வரவில்லை. ஒரு இரங்கல் செய்தியும் வெளியிட வில்லை. இதை பற்றி சினிமா பத்திரிக்கையாளரான வி.கே. சுந்தர் பல விஷயங்களை பகிர்ந்தார். அதாவது விஜயகாந்த் மறைவிற்கு உடனே அஜித் விஜயகாந்தின் மச்சான் சுதீஷிடம் குறுஞ்செய்தியை அனுப்பியதாகவும் அதை பிரேமலதாவிடமும் தெரிவிக்க சொன்னதாகவும் பத்திரிக்கையாளார் வி.கே.சுந்தர் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் விவேக் மறைவிற்கு அன்று இரவே விவேக் உடலை பார்த்து அஜித் அஞ்சலி செலுத்தியதாகவும் எஸ்.பி.பியின் மறைவிற்கும் மறு நாள் அவர் வீட்டிற்கு சென்று வந்ததாகவும் அந்த பத்திரிக்கையாளர் கூறினார். மேலும் கேப்டன் உடலுக்கு அஞ்சலி செலுத்தாதற்கு காரணம் சூட்டிங்தான் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அயலான் படத்துக்கு ஆப்பு வச்ச விஜய் பட புரடியூசர்!.. புலம்பி தவிக்கும் எஸ்.கே…
ஏனெனில் அஜர்பைஜானில் கடுங்குளிராம். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 14 மணி நேரம் படப்பிடிப்பு நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்களாம். அப்படி நடத்தினால்தான் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்ற காரணத்தினால்தான் எங்கும் நகர முடியாமல் அஜித் இருக்கிறாராம். ஒரு வேளை அவர் வந்தால் மூன்று நாள் இடைவெளி வந்து விடும். இது விடாமுயற்சி படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் இடையூறை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால்தான் வராமல் இருந்திருக்கிறார் என்று அந்த பத்திரிக்கையாளர் கூறினார்.
மேலும் இரங்கல் செய்தி என்பது அஜித்துக்கும் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்குமே உள்ள விஷ்யம். அதை பப்ளிசிட்டி செய்வதை எப்போதும் அஜித் விரும்பமாட்டார். அதனாலேயே அவர் சமூக வலைதளங்கள் மூலமாக இரங்கல் அறிக்கையை வெளியிடவில்லை என்றும் அந்த பத்திரிக்கையாளர் கூறினார்.
இதையும் படிங்க: அண்ணன் ஒட்ட நினைக்க தம்பி வெட்ட நினைக்காரு! கலைஞர் 100 விழாவில் அமீரை பார்த்த கார்த்தியின் ரியாக்ஷன்