கோட் படத்துக்கு ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு!.. கல்லா கட்டுமா தளபதி 68!..

by சிவா |   ( Updated:2024-01-09 13:48:13  )
goat
X

Goat: லியோ படத்திற்கு பின் வெங்கட்பிரபு இயக்கி வரும் ஒரு புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவரின் 68வது திரைப்படமாகும். இப்படத்தில் சினேகா, மீனாக்‌ஷி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த் என பலரும் நடித்து வருகிறார்கள். பல நடிகர் பட்டாளம் இதில் இருப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.

அதோடு, மாநாடு எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த வெங்கட் பிரபு இப்படத்தை இயக்குவதால் எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது எல்லோருக்கும் தெரியும். பிகில் படத்தை தொடர்ந்து இப்படத்திலும் விஜய் அப்பா - மகனாக நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: அயலான் படத்துக்கு ஆப்பு வச்ச விஜய் பட புரடியூசர்!.. புலம்பி தவிக்கும் எஸ்.கே…

அதில் ஒரு விஜயை ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் மிகவும் இளைமையாக காட்டவுள்ளனர். ஏற்கனவே, இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு கோட் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்படி சொல்லாமல் Greatest of all time என்றே போஸ்டரில் இப்படத்தின் பெயர் இடம் பெற்று வருகிறது.

எப்படியும் இன்னும் இரண்டு மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஸ்ரீலங்கா, பேங்காக், சவுத் ஆப்பிரிக்கா என பல நாடுகளிலும் நடத்தி வருகின்றனர். கண்டிப்பாக இப்படம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் விருந்தாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இனிமேல் கோலிவுட் பக்கமே வரக்கூடாது! நடிகையை கடுமையாக விளாசிய கே ராஜன்

இந்நிலையில், இப்படத்த வருகிற ஜுன் 13ம் தேதி வியாழக் கிழமை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஏனெனில் 17ம் தேதி திங்கள் கிழமை பக்ரீத் பண்டிகை வருகிறது. எனவே, தொடர் விடுமுறையில் படத்தை வெளியிட்டால் கல்லா கட்டி விடலாம் என தயாரிப்பாளர் தரப்பு கணக்குப்போடுகிறது.

வாரிசு படம் பெரிய வசூலை பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் வாரிசு படத்தை விட துணிவு படம் அதிக வசூலை பெற்றதாகவும் சொல்லப்பட்டது. அதேபோல், லியோ படமும் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. எனவே, கோட் படத்தின் ரிசல்ட்டை நம்பியிருக்கிறார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜயகாந்த் 120 முறை பார்த்து ரசித்த அந்த திரைப்படம்!.. வெறித்தனமான ரசிகரா இருந்தி்ருக்காரே!..

Next Story