Connect with us
meena

Cinema News

கமலோட அந்த சீன்!. பயந்து போயிட்டேன்!.. அழுகையே வந்திடுச்சி!.. மீனா சொன்ன சீக்ரெட்…

Actress meena: ஜெமினி கணேசனுக்கு பின் ‘காதல் மன்னன்’ என்கிற பட்டம் கமல்ஹாசனுக்குதான் கிடைத்தது. ஏனெனில், ஜெமினி கணேசனை போலவே பெரும்பாலும் காதல் கதைகளில் நடிப்பார். 80களில் கமல் நடித்த 95 சதவீத படங்களில் காதல் காட்சி சிறப்பாக இருக்கும். இதனாலேயே இவருக்கு பெண் ரசிகைகளும் உருவானார்கள்.

அதில் நிறைய படங்களில் கதாநாயகிக்கு சொல்லாமலேயே லிப்-லாக் கொடுத்து விடுவார். கடலோரக் கவிதைகள் படத்தில் அறிமுகமான நடிகை ரேகா அடுத்து பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த புன்னகை மன்னன் படத்தில் நடித்தார். இந்த படத்தில் முதல் காட்சியிலேயே கமலுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருப்பார். அதிலும், லிப்லாக் கொடுத்து மயங்க வைப்பார் கமல். கமல் எனக்கு முத்தம் கொடுப்பார் என்பதே எனக்கு தெரியாது என பின்னாளில் பேட்டி கொடுத்தார் ரேகா.

இதையும் படிங்க: இந்த 6 பொண்ணுங்கள நம்பி ஏமாந்துட்டேன்! பிரதீப் ஆண்டனி விஷயத்தில் உண்மையை உடைத்த பிரபலம்

கமலை பொறுத்தவரை லிப்-லாக் கொடுப்பது என்பது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல. சில நடிகைகள் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். சில நடிகைகள் அவருடன் நடிக்கவே பயப்படுவார்கள். கமல் முத்தம் கொடுத்துவிடுவார் என பயந்தே அவரோடு நடிக்காமல் போன நடிகைகளும் இருக்கிறார்கள்.

சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் நடிகை மீனா. என் ராசாவின் மனசிலே படத்தில் அப்பாவி கிராமத்து பெண்ணாக சிறப்பாக நடித்தவர். முத்து திரைப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் ரஜினி, சத்தியராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார் என பலருடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: மின்னல் வேகத்துல போறாரே!.. வேட்டையன் படப்பிடிப்பில் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்!..

கமலுக்கு ஜோடியாக மீனா நடித்த திரைப்படம் அவ்வை சண்முகி. இந்த படத்தில் நடித்தது பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய மீனா ‘கமல் சார் படம் என்றாலே லிப்-லாக் காட்சி இருக்கும் என சில நடிகைகள் மனதளவில் தயாராகி விடுவார்கள். நான் அதெல்லாம் யோசிக்கவே இல்லை. ஆனால், ஒரு காட்சியில் நடிக்கும்போது லிப்-லாக் காட்சி என படப்பிடிப்பில் எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.

kamal

அப்போதுதான் எனக்கு பயமே துவங்கியது. எனக்கு அப்படி நடிக்க விருப்பமில்லை. என் அம்மாவிடம் சொல்லி ‘இந்த காட்சி வேண்டாம் என சொல்லுங்கள்’ என அழ துவங்கிவிட்டேன். அதற்குள் ஷாட் ரெடி என கூப்பிட்டுவிட்டனர். கண்ணெல்லாம் கலங்கி விட்டது. பயந்து கொண்டே போனேன். ‘நீ கீழே படும்மா’ என்றார்கள். ‘ஐயோ கதை முடிந்துவிட்டது’ என ஒரே பயம். கமல் சார் என் முகத்திற்கு அருகே வந்து ‘இன்னைக்கு இது வேண்டாம்’ என ஒரு வசனம் சொன்னார். ‘அப்பாடா’ என அப்போதுதான் எனக்கு உயிரே வந்தது’ என மீனா சிரித்துக்கொண்டே சொன்னார்.

இதையும் படிங்க: தங்கலானா முக்கியம்!.. தங்கம் எப்படி ஏறி இறங்கி வொர்க்கவுட் பண்றாங்கன்னு பாருங்கடா!..

google news
Continue Reading

More in Cinema News

To Top