கேப்டன் மில்லருக்கு டஃப் கொடுக்கும் அயலான்!.. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?!..

Published on: January 13, 2024
ayalaan
---Advertisement---

Ayalaan : தனுஷின் கேப்டன் மில்லரும், சிவகார்த்திகேயனின் அயலான் படமும் பொங்கல் விருந்தாக திரையரங்கில் வெளியாகியுள்ளது. இமான் விஷயத்தில் சிவகார்த்திகேயன் சிக்கியதால் ரசிகர்களின் ஆதரவு கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருந்தது. ஒருபக்கம், ஏலியன் பூமிக்கு வரும் ஒரு சயின்ஸ் பிக்சன் கதை இது என்பதால் எதிர்பார்ப்பும் இருந்தது.

இப்படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயனோடு ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் என பலரும் நடித்துள்ளனர். தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு போட்டியாக இப்படம் வெளியானது.

இதையும் படிங்க: என்னதான் இருந்தாலும் அந்த குற்ற உணர்வு இருக்கும்ல? நடிகரிடம் வருத்தப்பட்டு பேசிய SK

ஏனெனில், தனுஷ் மூலம் சிவகார்த்திகேயன் சினிமாவில் உயர்ந்தாலும் ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்துவிட்டனர். தனுஷுக்கு நெருக்கமாக இருந்த அனிருத்தையும் சிவகார்த்திகேயன் தன் பக்கம் இழுத்துக்கொண்டு வந்துவிட்டார். எனவே, சிவகார்த்திகேயன் மீது தனுஷ் கோபத்தில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

அயலான் படம் 100 சதவீதம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் ‘ஓகே. பார்க்கலாம்.. நன்றாக இருக்கிறது’ என பொதுவாக பலரும் சொல்லி வருகிறார்கள். குறிப்பாக இப்படத்தில் VFX காட்சிகள் சிறப்பாக இருப்பதாக பலரும் பாராட்டி வருகிறார்கள். அதோடு, ஏலியனோடு சிவகார்த்திகேயன் அடிக்கும் லூட்டி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அயலான் திரைப்படம் வெளியாகி ஒரு நாள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் மொத்தமாக ரூ.30 கோடி வரை வசூல் செய்திருப்பதாகவும் தமிழகத்தில் மட்டும் ரூ.15 கோடி வரை வசூல் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை இருப்பதால் இப்படம் ரூ.100 கோடி வரை வசூல் செய்யும் எனவும் சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: விஜயகாந்த் நடிப்பில் அதிக நாட்கள் ஓடிய டாப் 15 படங்கள்!.. ரஜினி படத்தை தாண்டிய சின்னக் கவுண்டர்..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.