Connect with us

Bigg Boss

கடைசி நேரத்துல என்ன இப்படி ஆகிடுச்சு.. இந்த சீசனிலும் கமல் ஃபேவரைட் போட்டியாளருக்கு கப் கிடைக்கலையா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த யாருமே டைட்டிலை வெல்லவில்லை. முதல் சீசனிலேயே சுஜா வருணி வைல்டு கார்டாக நுழைந்து கடைசி வரை டஃப் போட்டி கொடுத்திருப்பார்.

அதன் பின்னர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்டு கார்டாக உள்ளே நுழைந்த ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தது. ஆனால், முதன்முறையாக இந்த சீசனில் தான் வைல்டு கார்டு போட்டியாளர் டைட்டிலை வென்றிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதையும் படிங்க: எல்லாரும் நடிக்குறாங்க… ஐஸ்வர்யா ராஜேஷ் கேப்டனோட கால் தூசி!.. வெடிக்கும் மீசை ராஜேந்திரன்…

பிக் பாஸ் தமிழ் 7 ஷூட்டிங் முழுமையாக முடிந்ததா? என்பதே சந்தேகமாக உள்ள நிலையில், விஜே அர்ச்சனா தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்றும் 50 லட்சம் பரிசை அவர் தான் வென்றுள்ளார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

கடந்த சீசனில் கமல்ஹாசனின் ஃபேவரைட் போட்டியாளரான விக்ரமனுக்கு டைட்டில் கிடைக்காமல் அசீமுக்கு கிடைத்தது. இந்நிலையில், இந்த சீசனிலும் கமல்ஹாசனின் ஃபேவரைட் போட்டியாளரான மாயாவுக்கு டைட்டில் கிடைக்காமல் அர்ச்சனாவுக்கு கொடுத்துள்ளனர் எனக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: நான் தோத்து போனதுக்கு காரணமே அந்த நடிகர்தான்!.. பல வருடங்கள் கழித்து சொன்ன சித்தப்பு சரவணன்..

நாளை ஒளிபரப்பாக உள்ள கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கருப்பு உடையில் கலக்கலாக கமல்ஹாசன் என்ட்ரி கொடுத்து போட்டியாளர்களை வீட்டில் இருந்து பிக் பாஸ் அரங்கத்திற்கு அழைத்து வர உள்ளார். கடந்த ஆண்டு வான் வழியாக போட்டியாளர்கள் வந்த நிலையில், இந்த ஆண்டு என்ன மேஜிக் செய்யப் போகின்றனர் என்பதை நிகழ்ச்சியில் கண்டு ரசிக்கலாம். ரன்னர் அப்பாக மணிகண்டன் வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top