Connect with us
Saravanan

Cinema News

நான் தோத்து போனதுக்கு காரணமே அந்த நடிகர்தான்!.. பல வருடங்கள் கழித்து சொன்ன சித்தப்பு சரவணன்..

Actor saravanan: 90களில் திடீரென வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் சரவணன். இவர் சேலத்தை சேர்ந்தவர் என்பதால் சேலம் சரவணன் என அழைப்பார்கள். இவரின் நடிப்பில் வெளியான சில படங்கள் ஹிட் அடித்ததால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் வாய்ப்புகளை இழந்தார். உடல் எடையும் கூடி தோற்றமும் மாறியது. அதன்பின் சில வருடங்கள் அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை. திடீரென பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா படத்தில் வில்லனாக் நடித்து அதிரவிட்டார். அந்த படத்தில் அவரை பார்த்த ரசிகர்கள் ‘அட நம்ம சரவணனா இது?’ என அதிர்ந்து போனார்கள்.

இதையும் படிங்க: என்னை ஏத்துக்கோ பாபு!… கெஞ்சிய மனைவி.. மனம் இறங்காத சந்திரபாபு!… திருமண வாழ்வில் நடந்த திருப்பம்..

ஆனால், சரவணனுக்கு பருத்திவீரன் படம் மூலம் மறுபிறவி கொடுத்தவர்தான் இயக்குனர் அமீர். இந்த படத்தில் கார்த்தியின் சித்தப்பாக சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்தில் கார்த்தி இவரை சித்தப்பு.. சித்தப்பு என அழைக்கவே அதுவே இவரின் அடையாளமாக மாறிவிட்டது. வெளியில் எங்கு பார்த்தாலும் ரசிகர்களும் அவரை அப்படியே அழைக்க துவங்கிவிட்டனர்.

actor saravanan

பருத்திவீரன் படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் நடிகராக மாறிவிட்டார் சரவணன். குணச்சித்திரம், வில்லன், அடியாள் என பல படங்களிலும் அவரை பார்க்க முடிகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சரவணன் ‘ நான் சினிமாவில் நடிக்க வரும்போது விஜயகாந்த் என்னைவிட 18 வயது மூத்தவர்’.

இதையும் படிங்க: விஜயகாந்தை இவ்வளவு நாள் காப்பாத்துனதே இதுதான்! ஓ இதுக்குத்தான் யாரையும் பாக்க விடலயா?

ஆனால், நான் அவரை போலவே இருப்பதாக பலரும் சொன்னார்கள். தலைமுடி, கண்கள், தாடை ஆகியவை அவரை போலவே இருக்கலாம். ஆனால், நான் அவரை போல இல்லை. அதுவே எனக்கு பெரிய மைனஸாக மாறிவிட்டது. நான் அவரை போலவே இருக்கிறேன் என்பதே என்னை தோற்க வைத்துவிட்டது’ என சொல்லியிருந்தார்.

அதேபோல், பருத்திவீரன் படத்தில் எனக்கு எந்த லாபமும் இல்லை. பெரிய வாய்ப்புகள் வரவில்லை என்றும் புலம்பினார். ஆனால், இதற்கு பதில் சொன்ன அமீர் ‘பருத்திவீரன் படத்திற்கு பின் ‘நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடியுங்கள்’ என அவருக்கு அறிவுரை சொன்னேன். ஆனால், அவர் கேட்காமல் கிடைக்கும் எல்லா படங்களிலும் நடித்தார். பருத்திவீரன் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள அவருக்கு தெரியவில்லை’ என சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்த டைம்ல மட்டும் விஜய்கிட்ட பேசவே முடியாது! இருந்தாலும் தளபதி ரொம்ப சூடாதான் இருப்பார் போல

google news
Continue Reading

More in Cinema News

To Top