Connect with us
mgr

Cinema History

ரெண்டு படம் நடிச்சிட்டா டைரக்டர் ஆயிடலாமா?!.. சீண்டிய நபருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பதிலடி..

Actor mgr: சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து வந்ததால் நடிப்பின் எல்லா நுணுக்கங்களையும் கற்றவர்தான் எம்.ஜி.ஆர். சினிமாவில் அவர் நடித்தது கிட்டத்தட்ட எல்லாமே ஒரு மாதிரி வேடம்தான். ஆனால், நாடகங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது.

30 வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவில் நுழைந்து 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்னர் ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக மாறியவர்தான் எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிக்க துவங்கி 10 வருடம் ஆன நிலையில் நாடோடி மன்னன் என்கிற படத்தை தயாரித்து, இயக்கி நடித்தார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் ஆசைப்பட்டும் நடக்காமல் போன ஒரே விஷயம்… தடையாக இருந்த அரசியல்….

அப்போது எல்லாரும் எம்.ஜி.ஆர் பெரிய ரிஸ்க் எடுப்பதாகவே பேசினார்கள். 10 வருடங்களாக சினிமாவில் சம்பாதித்த எல்லா பணத்தையும் போட்டதோடு, வீட்டின் மீது கடன் வாங்கியும் அந்த படத்தையும் அவர் எடுத்தார். இப்படத்தை எடுக்கும்போது அவர் பல பிரச்சனைகளையும் சந்தித்தார். ஆனாலும், வெற்றிகரமாக எடுத்து முடித்து வெளியிட்டார். அப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

அதன்பின் உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகிய படங்களை அவர் இயக்கியிருக்கிறார். அதேபோல், படப்பிடிப்புக்கு இயக்குனர் வர தாமதமானால் அவரின் வேலையை எம்.ஜி.ஆரே செய்துவிடுவார். நாடோடி மன்னன் படம் எடுக்கும்போது அவரை ஒரு பத்திரிக்கையாளர் பேட்டியெடுத்தார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பலமுறை ரசித்து பார்த்த விஜயகாந்த் படம்!.. அதுக்கு ஒரு காரணம் இருக்கு!…

எம்.ஜி.ஆரிடம் ‘இரண்டு டங்களில் நடித்துவிட்டு ஒருவர் இயக்குனராகி விட முடியுமா?’ என கேட்டிருக்கிறார். அதற்கு பதில் சொன்ன எம்.ஜி.ஆர் ‘நீங்கள் என்னை மனதில் வைத்துதான் இந்த கேள்வியை கேட்கிறீர்கள் என எனக்கு தெரியும். இயக்குனர் ராஜா சந்திரசேகரிடம் பல தொழில்நுட்பங்களை கற்றவன் நான். இயக்கம் என்பது சுலபம் அல்ல. ஒரு படத்தின் கதை, வசனத்தை பற்றி கதாசிரியரை விட அந்த இயக்குனருக்கு அதிகம் தெரிந்திருக்க வேண்டும்.

அதேபோல், தான் மனதில் கற்பனை செய்து பார்த்த காட்சிகள் திரையில் எப்படி வரும்.. எப்படி எடுத்தால் அது சரியாக இருக்கும் என்பதை உணர்ந்தவராக இருக்க வேண்டும். ஒரு காட்சிக்கு நடிகர்கள் எப்படி நடிக்க வேண்டும், அவர் எதிர்பார்த்த நடிப்பு நடிகர்களிடம் வரவில்லை என்றால் அதை அவர்களிடம் வாங்க தெரிந்தவராக இயக்குனர் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக எடுக்கப்படும் காட்சி படத்தில் எப்படி அமையும் என்பதை முன்கூட்டியே சிந்திக்க தெரிந்த ஆற்றல் பெற்றவராக ஒரு இயக்குனர் இருக்க வேண்டும்’ என தெளிவாக விளக்கி சொன்னார் எம்.ஜி.ஆர்.

இதையும் படிங்க: ஆபிஸ் பாய் என் படத்துக்கு மியூசிக் டைரக்டரா?!. எம்.எஸ்.வியை வேண்டாம் என சொன்ன எம்.ஜி.ஆர்..

google news
Continue Reading

More in Cinema History

To Top