Connect with us
viji

Cinema News

விஜயகாந்துக்காக இணையும் ஒட்டுமொத்த கோடம்பாக்கம்! முக்கிய தகவலை பகிர்ந்த விஷால்

Actor Vishal: தமிழ் சினிமாவில் புரட்சித்தளபதி என்ற பெயரால் அழைக்கப்படுபவர் நடிகர் விஷால்.  நடிகர் அர்ஜூனிடம் வேதம் , ஏழுமலை போன்ற படங்களில் உதவியாளராக பணியாற்றியவர்தான் விஷால். அதன் பிறகு அர்ஜூன் சொன்னதன் பேரில்  ‘செல்லமே’ படத்தில் ஹீரோவாக களமிறங்கினார்.

ஆரம்பத்தில் மிடுக்கான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் அடுத்தடுத்த படங்களிலும் ஒரே மாதிரியான ரியாக்‌ஷனுடனேயே பயணிக்க ஆரம்பித்தார். இது சில சமயங்களில் அவரை ட்ரோல் செய்யவும் ஏதுவாக அமைந்தது.

இதையும் படிங்க: ரெண்டு படம் நடிச்சிட்டா டைரக்டர் ஆயிடலாமா?!.. சீண்டிய நபருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பதிலடி..

நடிகர் சங்கத்திலும் ஒரு  முக்கிய பொறுப்பில் இருக்கிறார் விஷால்.  இந்த நிலையில் சமீபத்தில் விஜயகாந்த் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.ஆனால் அந்த நேரம் எந்த முக்கியமான நடிகர்களும் உள்ளூரிலேயே இல்லை.

அனைவரும் வெளியூர் பயணமாக வெளி நாடுகளில் இருந்தனர். அதனால் அவரது அஞ்சலியை நடிகர் சங்கம் நடத்த வேண்டியது. ஆனால் அவருடைய கட்சியினரே எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் நடத்தி முடித்து விட்டனர்.

இதையும் படிங்க: ஹிட் பட இயக்குனர்களை காக்க வைத்து காலி பண்ணும் ரஜினி, கமல்!.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!..

இதனால் விஷால் அமெரிக்காவில் இருந்தே ஒரு வீடியோ இரங்கலை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அதில்  ‘அண்ணே என்னை மன்னிச்சுடுங்கண்ணே’ என்று சொல்லி தான் வரமுடியாத சோகத்தில் கண்ணீர் விட்டு அழுதார். அதன் பிறகு சென்னைக்கு திரும்பிய விஷால் நேராக விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில் வரும் 19 ஆம் தேதி நடிகர் சங்கம் சார்பாக ஒரு இரங்கல் கூட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இன்று பொங்கலை முன்னிட்டு பொதுமக்களுடன் விஷால் பொங்கல் திருநாளை கொண்டாடி வருகிறார். அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய விஷால் ‘வரும் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடிகர் சங்கம் சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெறும். அந்த இரங்கல் கூட்டத்திற்கு அனைத்து நடிகர்களும் கண்டிப்பாக வருகிறார்கள். அனைவருக்கும் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு விட்டது.’

இதையும் படிங்க: கேப்டன் மில்லருக்கு டஃப் கொடுக்கும் தளபதி!.. கோட் படத்தின் புது போஸ்டர் பாருங்க…

‘ஒரு நல்ல மனிதருக்கு இதை நாங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். அனைவரும் வருவார்கள்’ என்று கூறினார் விஷால்.

google news
Continue Reading

More in Cinema News

To Top