Cinema News
வடிவேலு இல்ல.. பொடிவேலு!.. இவ்ளோ வன்மம் இருக்க கூடாது.. பொளந்து கட்டிய இயக்குனர்
Actor Vadivelu: நடிகர் சார்லின் சாப்ளினை எப்படி தவிர்க்க முடியாதோ அதே போல வடிவேலுவும் நகைச்சுவையில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார். அத்தனை உணர்ச்சிகளையும் தன் முகபாவனைகளாலும் உடல் மொழியாலும் வெளிப்படுத்தி மற்றவர்களை சிரிக்க வைப்பதில் வல்லவர் வடிவேலு.
இந்த நிலையில் பிரபல சினிமா இயக்குனரான ப்ரவீன் காந்தி சமீபத்தில் வடிவேலுவை பற்றி அவருடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார். நேற்று முன்தினம் நடிகர் சங்கம் சார்பாக நடந்த விஜயகாந்த் இரங்கல் கூட்டத்திற்கு வடிவேலு வரவில்லை.
இதையும் படிங்க: ஒரே படம்!.. ஓவர் நைட்டில் ஒபாமா ஆன 5 நடிகைள்.. சும்மா கொட்டுது கோடி!..
மற்ற முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு அவரவர் அஞ்சலியை செலுத்தினார்கள். விஜயகாந்த் மறைவிற்கு நேரடியாக போக முடியாத சூழ் நிலையில் இருந்த வடிவேலு ஒருவேளை இந்த இரங்கல் கூட்டத்திற்காவது வந்திருக்கலாம். இங்கு யார் என்ன சொல்லப் போகிறார்கள்?
ஆனால் அவர் வராதது மிகவும் வருத்தத்தை அளித்தது என இயக்குனர் பிரவீன் காந்தி கூறினார். வடிவேலு இப்பொழுது பொடிவேலு ஆகிவிட்டார். அவரிடம் வன்மமே நிறைந்து காணப்படுகிறது. இந்தளவு வன்மம் இருக்கும் ஒரு மனிதரிடம் எப்படி இவ்வளவு நகைச்சுவை உணர்வு இருக்கிறது என்பதை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்றும் பிரவீன் காந்தி கூறினார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் குடும்பத்தையே அசிங்கப்படுத்திட்டாரு விஷால்!.. எல்லாமே போலி நாடகம்.. ஷாக் கொடுத்த பிரபலம்!
அதுமட்டுமில்லாமல் காமெடி என்பது ஒரு குழந்தைத்தனம். அது எளிதில் யாருக்கும் கிடைத்து விடாது. காமெடி யாரிடம் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளவும் வேண்டும். நகைச்சுவை என்பது ஒரு பெரிய கலா ரசனை.
அப்படி ரசனை உள்ள உச்சம்தான் வடிவேலு. காமெடியின் ரசனையின் ராஜா வடிவேலு. அப்படி ஒரு அற்புதமான கலைஞன் எப்படி இந்தளவுக்கு அர்ப்பமாக இருக்கிறார் என்று தெரியவில்லை. என்ன பிரச்சினையாக இருக்கட்டும். விஜயகாந்த் வடிவேலுவின் சொத்தை பிடிங்கினாரா?
ஆனால் விஜயகாந்தின் வாழ்க்கையையே அழித்தவர் வடிவேலு. கலைஞரை குஷிப்படுத்த வேண்டுமென்று விஜயகாந்தை எவ்வளவு மட்டமாக பேச வேண்டுமோ அந்தளவுக்கு மட்டமாக பேசியவர் வடிவேலு. ஆனாலும் விஜயகாந்த் ஜெயித்தார். அன்றிலிருந்து வடிவேலுவால் சினிமாவில் தலைதூக்க முடியவில்லை. அது வடிவேலுவுக்கு உண்டான சாபம்.
இதையும் படிங்க: யாரு கர்ப்பமா இருக்காங்கனு தெரியலையே!.. அவர் வேற வயித்த காட்டுறாரு.. அமலா பால் அலப்பறைகள்!..
அதிலிருந்து அவரால் மீள முடியவில்லை. சமீபத்தில் நடந்த இரங்கல் கூட்டத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தியிருந்தால் வடிவேலுவுக்கு இது ஒரு பரிகாரமாக கூட போயிருக்கும். ஆனால் வரவில்லை. அவர் ஒரு நல்ல கலைஞன்தான். ஆனால் நல்ல மனிதரா என்றால் யோசிக்க வேண்டும் என பிரவீன் காந்தி கூறினார்.