Actor Sivakumar: தமிழ் சினிமாவின் என்றும் மார்க்கண்டேயன் என குறிப்பிடப்படும் நடிகர் சிவக்குமார். 80 வயதை கடந்தாலும் இன்னும் அதே பொலிவுடனும் புத்துணர்ச்சியுடனும் திடகார்த்தமாக வலம் வருகிறார் என்றால் அவர் கடைப்பிடிக்கும் யோகாவும் உடற்பயிற்சியுமே காரணம். நாள்தோறும் அவர் வயதுக்கு மீறிய யோகாசனங்களை கடுமையாக கடைபிடித்து வருகிறார் சிவக்குமார்.
அதுமட்டுமில்லாமல் எந்தவொரு கெட்டப்பழக்கமும் இல்லாமல் தன் உடல் நலத்தை நன்முறையில் பேணிக்காத்து வருகிறார். சினிமா பிரபலங்கள் மத்தியில் மிகவும் மதிக்கத்தக்க நடிகராகவும் இருந்து வருகிறார். சிவக்குமார் என்றாலே அவருக்கென்று ஒரு தனி மரியாதையே இருக்கிறது.
Also Read
இதையும் படிங்க: ‘கோட்’ படத்த்தின் ஷூட்டிங் இலங்கையில் நடக்குமா?!.. இடியாப்ப சிக்கலில் தளபதி விஜய்!..
நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த ஓவியக்கலைஞராகவும் ஆற்றல் பெற்றவர் சிவக்குமார். இவர் கைவண்ணத்தில் எண்ணற்ற ஓவியங்களை வரைந்து அதை கண்காட்சிகளுக்காகவும் வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நடிப்பே வேண்டாம் என முடிவெடுத்த சிவக்குமார் கம்பராமாயணம் குறித்த ஆய்வுகளில் இறங்கி கம்பராமாயணம் தொடர்பான சொற்பொழிவுகளை நடத்தினார்.
பல மேடைகளில் கம்பராமாயணம், மகாபாராதம் போன்றவைகளை பற்றி பல சொற்பொழிவுகளை நடத்தியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் திருக்குறளை பற்றி தொடர்ந்து 4 மணி நேரம் பேசிய சிவக்குமார் அது பற்றிய வீடியோ இணையத்திலும் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் யோகா குறித்த ஒரு விழிப்புணர்வில் கலந்து கொண்டு பேசிய சிவக்குமார்,
இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் பாக்கியலட்சுமியின் அடுத்த மகா சங்கமம் ஆரம்பம்!… எத்தன தடவை?
நான் இந்தளவுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் யோகாதான் என்றும் சிவாஜி, எம்ஜிஆர் இவர்களெல்லாம் 70 வயதிலேயே இயற்கை எய்திவிட்டனர். அவர்கள் பல உலக சாதனைகளை செய்திருந்தாலும் நான் இன்னும் 82 வயதிலேயே மிக்க நலமுடன் இருக்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் யோகாதான் என மாணவர்களிடம் எடுத்துரைத்திருக்கிறார்.



