Connect with us
simbu

Cinema News

படத்த ரிலீஸ் பண்ண விடாம டார்ச்சர்! 30 கோடி நஷ்டம் கேட்கும் சிம்பு.. மனக் குமுறலில் தயாரிப்பாளர்

Actor Mahat: நடிகர் மஹத் என்று சொன்னாலே முதலில் நம் நினைவுக்கு வருபவர் சிம்புதான். ஏனெனில் அந்தளவுக்கு மஹத்தும் சிம்புவும் நெருங்கிய நண்பர்கள். மஹத்தின் எந்த விழாவானாலும் கொண்டாட்டமானாலும் சிம்பு இல்லாமல் அந்த விழா நடக்காது. மஹத்தின் பெரும்பாலான புகைப்படங்கள் வீடியோக்களில் சிம்புவின் முகமும் தெரியும்.

சிம்புவின் ஒரு சில படங்களிலும் மஹத் நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமான மஹத் அதன் மூலம் தொடர்ச்சியாக படவாய்ப்புகளை பெற்றார். இப்போது ஒரு பிஸியான நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட இவர் நடித்த ‘கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா’ என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதையும் படிங்க: இவனையெல்லாம் ஏன் உள்ள விட்டீங்க!. சிவாஜியை அசிங்கப்படுத்திய எம்.ஜி.ஆர் பட இயக்குனர்…

ஆனால் அந்த விழாவுக்கு மஹத் வரவில்லை. மேலும் அந்தப் படத்தில் சாக்‌ஷி அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் பேசும் போது நாங்கள் எத்தனையோ முறை அழைத்தும் மஹத் வர மறுத்துவிட்டார் என்று கூறினார். அதற்கு காரணம் மஹத்துக்கும் அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும் இடையே இருக்கும் பிரச்சினைதான்.

2021 ஆம் ஆண்டில் இந்தப் படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். மஹத்துக்கு 15 லட்சம் சம்பளம் என பேசி அக்ரிமெண்ட் போட்டு படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். படப்பிடிப்பும் நல்ல படியாக போக க்ளைமாக்ஸ் காட்சியின் போது திடீரென மஹத் ஆறு மாசம் அவருடைய தொலைபேசி நம்பரை ப்ளாக் செய்து விட்டாராம். எப்படியோ அவரை பிடித்து மீதி காட்சிகளில் நடிக்க வைக்க அழைத்து வந்தால் இன்னும் சம்பளம் அதிகமாக வேண்டும் என மஹத் கேட்கிறாராம்.

இதையும் படிங்க: வடிவேலு சொன்ன ஐடியா.. படம் வேற லெவல்! விஜய் படம் குறித்த சீக்ரெட்டை பகிர்ந்த இயக்குனர்

அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளரிடம் மஹத் ஏதோ டாக்குமெண்டில் கையெழுத்து கேட்கிறாராம். அப்படி போடாவிட்டால் படத்தை ரிலீஸ் பண்ண விட மாட்டேன் என்று சொல்கிறாராம். அதுமட்டுமில்லாமல் ‘கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டைட்டிலையும் வெளியிட்டதே சிம்புதானாம். இப்பொழுது இந்த பிரச்சினையில் சிம்புவும் அவரது பெயரை பயன்படுத்தக் கூடாது என 30 கோடி நஷ்ட ஈடு கேட்கிறாராம்.

மேலும் ஒரு ஓப்பனிங் சாங் முடித்து அதை படமாக்காமல் வைத்திருக்கிறார்களாம். ஏனெனில் அந்த சாங்கை பாடியதே சிம்புதானாம். அதனால் அந்த பாடலை இந்தப் படத்தில் பயன்படுத்தினால் சிம்புவுக்கு 30 கோடி கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் அதையும் படமாக்காமல் இருக்கிறார்களாம். ஒரு ஹீரோவை நம்பித்தான் பணமே போடுகிறோம். ஆனால் அந்த ஹீரோவே இப்படி பண்ணும் போது நாங்கள் எங்கு போவது?

இதையும் படிங்க: பொறாமை இருக்க வேண்டியதுதான்! அதுக்காக இப்படியா? பிரபல நடிகையை விமர்சித்த மகிமா நம்பியார்

மேலும் சென்சாருக்கும் படத்தை அனுப்பினால் அங்கும் சில பஞ்சாயத்துக்கள் நடந்து மொத்தமாக படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் ஏதேதோ வேலைகள் பார்க்கிறார்கள். நடிகர் சங்கம் என பல்வேறு இடத்திற்கும் இந்த பிரச்சினையை கொண்டு போய் விட்டேன். உண்மையிலேயே என்ன பிரச்சினை? என்ன பண்ணலாம் என மஹத் வந்து பேசினால்தான் எல்லாம் சுமூகமாக நடக்கும் என படத்தின் தயாரிப்பாளர் அவருடைய ஆதங்கத்தை கொட்டித்தீர்த்திருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top