Connect with us

Cinema News

விடாமுயற்சி டீமை வச்சி செய்யும் அஜர்பைஜன்!… இதெல்லாம் சரிப்பட்டு வராது.. ரூட்டை திருப்பிய மகிழ் திருமேனி…

Vidamuyarchi: விடாமுயற்சி படக்குழு சந்தித்தது போன்ற சிக்கலை இதுவரை எந்த சினிமாவும் சந்தித்தது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படி தற்போது ஷூட்டிங்கில் மண்ணை போட்ட இன்னொரு விஷயமும் நடந்து இருக்கிறது. இதனால் இயக்குனர் மகிழ் திருமேனி வேறு வழியை யோசித்து விட்டாராம்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தினை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். திரிஷா, அர்ஜூன், ஆரவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றனர். இப்படத்தின் இசையமைப்பு வேளைகளில் அனிருத் தற்போது பிசியாகி இருக்கிறார்.

இதையும் படிங்க: நீங்க மட்டும் தான் காப்பி அடிப்பீங்களா? ரஜினி ஸ்டைலில் தளபதி69ஐ தயாரிக்க போவது யார் தெரியுமா?

பெரிய போராட்டத்துக்கு பின்னர் தான் இப்படத்தின் ஷூட்டிங்கே தொடங்கியது. கிட்டத்தட்ட 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து இருக்கும் தற்போது ஒரு சிக்கல் உருவாகி இருக்கிறது. அதாவது படக்குழு அடுத்தக்கட்ட ஷெட்யூலுக்கு அஜர்பைஜான் கிளம்பி சென்றது.

ஆனால் எதிர்பாராத விதமாக அங்கு பனி மழை கொட்டி வருகிறதாம். அதில் ஷூட்டிங் செய்ய முடியாத நிலை உருவாகி விட்டது. இதனால் படக்குழு மீண்டும் சென்னை திரும்பிவிட்டது. அஜித் மட்டும் தன்னுடைய துபாய் சொகுசு பங்களாவிற்கு சென்றுவிட்டாராம். ஏற்கனவே அஜித்தின் கால்ஷீட் வேறு முடியும் கட்டத்தில் இருக்கிறது.

இனி லேட் செய்தால் அது நன்றாக இருக்காது. அஜர்பைனாக்கு பதில் ஷார்ஜாவிலே படப்பிடிப்பை நடத்த இயக்குனர் மகிழ் திருமேனி முடிவு எடுத்து இருக்கிறாராம். அஜித் ஓகே சொல்லும் பட்சத்தில் விரைவில் படப்பிடிப்பை தொடங்கி விரைவாக முடிக்கவும் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: இனிமேல் கோட் படத்தில் இந்த வேலை மட்டும் வேண்டாம்!… வெங்கட் பிரபுவிடம் கறார் காட்டிய விஜய்…

Continue Reading

More in Cinema News

To Top