Cinema News
சங்கீதாவுக்கு முன்னாடியே விஜய் வாழ்க்கையில் தென்றலாய் வீசிய பெண்! உயிர்த்தோழன் பகிர்ந்த சீக்ரெட்
Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது கோட் படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக அரசியலிலும் தடம் பதிக்க இருக்கிறார். அதற்கான முன்னேற்பாடுகளை தன் இயக்கம் சார்பாக செய்து கொண்டு வருகிறார். ஒரு பக்கம் சினிமா இன்னொரு பக்கம் அரசியல் என முழு நேர பிஸியான மனிதராகவே விஜய் இருந்து வருகிறார்.
ஆனால் சமீபகாலமாக அவர் குடும்பத்தை பற்றி எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் இருக்கின்றது. மனைவி சங்கீதா தன் மகளுடன் லண்டனில் வசித்து வருவதாகவும் மகன் ஜேசன் படம் இயக்கும் முயற்சியிலும் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: மாட்டிவிட ப்ளான் போடும் முத்து… மாமாவை பேக்கப் செய்யும் ரோகினி!… மொத்தத்துல ஒன்னும் நடக்காது அதானே…
இதனிடையில் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் ஏதோ கருத்து வேறுபாடு இருப்பதாகவும் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்றும் பல வதந்திகள் வந்தன. ஆனால் அது எதற்குமே விஜய் பதில் கூறவில்லை. தன் காதல் மனைவியான சங்கீதாவை 1999 ஆம் ஆண்டு விஜய் இந்து மற்றும் கிறிஸ்து ஆகிய இருமுறைப்படி திருமணம் செய்து கொண்டார். பூவே உனக்காக படத்தில் விஜயின் நடிப்பை பார்த்து அவர் மீது காதல் கொண்டார் சங்கீதா.
எப்படியாவது அவரை பார்க்க வேண்டும் என லண்டனில் இருந்து இந்தியா வந்தார் சங்கீதா. அதன் பிறகு ஒருவருக்கொருவர் பேசி புரிந்து கொண்டு காதலில் விழுந்து பின் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் விஜயின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் சமீபத்தில் விஜய் குறித்து சில ரகசியங்களை பகிர்ந்தார்.
இதையும் படிங்க: இதுக்கு மேல காச கொட்ட முடியாது!.. வெளிநாட்டுல இருந்து அஜித் படத்தை விரட்டிய தயாரிப்பு நிறுவனம்?..
அவர்கள் கல்லூரியில் படிக்கும் போது விஜய் அஞ்சலி என்ற பெண்ணின் மீது காதலில் விழுந்தாராம். ஆனால் அந்த பெண் விஜய்க்கு சீனியராம். விஜய்க்கு மட்டுமில்லை . கல்லூரியில் இருக்கும் ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் பிடித்த பெண்ணாக அஞ்சலி இருந்தாராம்.
அந்தளவுக்கு மிகவும் அழகான பெண்ணாம் அஞ்சலி. விஜய் ஜூனியர் என்பதால் அந்த பெண் தன்னை அழைத்து ராக்கிங் செய்ய மாட்டாரா என்றெல்லாம் காத்துக் கொண்டிருந்தாராம் விஜய். இந்த விஷயத்தை விஜயும் மறந்திருப்பார். அந்த அஞ்சலியும் மறந்திருப்பார் என சொல்லி சிரித்தார் ஸ்ரீநாத்.
இதையும் படிங்க: எல்லா கூட்டமும் ஒரே இடம் தானா? பாக்கியாவுக்கு இருக்க சோதனை போதாதா? முடியல…