Connect with us

latest news

மாட்டிவிட ப்ளான் போடும் முத்து… மாமாவை பேக்கப் செய்யும் ரோகினி!… மொத்தத்துல ஒன்னும் நடக்காது அதானே…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் பொம்மை போல உட்கார்ந்து இருக்கிறார்.  விஜயா என்னடா ஆச்சு என தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார். அப்போது வரும் ரவி குடிச்சி இருக்கான் என்கிறார். இதனால் முத்து தான் இதை செய்திருப்பான் என்பதால் திட்டி தீர்க்கிறார். அதே சமயத்தில் ரோகினி மாமாவும் நான் அப்போவே சொன்னேன் முத்து தான் மனோஜுக்கு ஊத்தி விட்டார் எனப் பொய் சொல்லிவிடுகிறார்.

இதனால் குடும்பமே முத்துவை திட்டுகின்றனர். செல்வம் சொல்ல வருவதையும் தடுத்து விடுகிறார் முத்து. பாட்டி கூட முத்துவை அடித்து திட்டிவிடுகிறார். குடும்பமே சந்தோஷமா இருக்கணும் நினைச்சா நீ ஏன் இப்படி செய்ற எனக் கோபமாக கேட்கிறார். மனோஜ் பேசாமல் உட்கார்ந்து இருப்பதால் மோரை கலக்கி கொடுக்கிறார்கள்.

இதையும் படிங்க: கேபிஒய் பாலா ஒரு பொண்ணோட கையை புடிச்சு காட்டுறாரே!.. அதுல என்ன இருக்குன்னு பாருங்க.. ஒரே ஷாக்!..

அதை குடித்துவிட்டு உப்பு கம்மியா இருக்குனு பேச தொடங்கிவிடுகிறார். பின்னர் விஜயாவை கட்டிப்பிடித்து கொள்கிறார். அவர் நாத்தம் தாங்காமல் தள்ளிவிடுகிறார். பாட்டியை கட்டிப்பிடித்து கொஞ்சுகிறார். ரவியுடன் ஏன் என்னை கல்யாணத்துக்கு கூப்பிடலை என புலம்புகிறார்.

ரோகினி காலில் விழுந்து என்னை மன்னிச்சிடு சீக்கிரம் வேலைக்கு போறேன். என்னை விட்டு போய்டாதே என்கிறார். மனோஜுக்கு இன்னும் போதை தெளியலை என ரூமில் படுக்க வைக்க சொல்கிறார் விஜயா. பின்னர் வெளியில் வரும் ரோகினியை தனியே அழைத்து போய் ஒரு பிசினஸ் வச்சா எல்லாம் சரியாகும் என ஷாக் கொடுக்கிறார்.

இதையும் படிங்க: பாலிவுட்டை காப்பாத்துனவருக்கே விருது இல்லையா!.. 6 விருதுகளை அள்ளிய அனிமல்.. கடுப்பான ஃபேன்ஸ்!..

மாமாவோட ஒரு பிசினஸை கொடுக்க சொல்லுமா எனக் கேட்க அப்போ கறிக்கடை தான் வச்சிக்கொடுக்கணும் என மனதில் நினைத்து கொள்கிறார் பின்னர் விஜயாவை சமாளித்து அனுப்ப அங்கே முத்துவும் செல்வமும் பேசிக்கொண்டு இருப்பதை ரோகினி ஒட்டுக்கேட்கிறார். அந்த மாமா தான் மனோஜுக்கு ஊத்திவிட்டதை தெரிந்து கொள்கிறார் ரோகினி. பின்னர் முத்து அந்த மாமாவை கண்டுப்பிடிக்க ப்ளான் போடுகிறார்.

இதை கேட்கும் ரோகினி ஷாக்காகிவிடுகிறார். பின்னர் ரூமுக்கு சென்று ரோகினி பிரவுன் மணியை ஏன் மனோஜுக்கு சரக்கு ஊத்திவிட்ட என திட்டுகிறார். நாளை சரியாக நடிக்கிறேன் என மாமா கூறுவிடுகிறார். அதெல்லாம் வேண்டாம். நீ நாளைக்கு உனக்கு ஒரு கால் வரும் உன் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லைனு உடனே கிளம்பிடணும் எனச் சொல்லிவிட்டு செல்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க:  இதுக்கு மேல காச கொட்ட முடியாது!.. வெளிநாட்டுல இருந்து அஜித் படத்தை விரட்டிய தயாரிப்பு நிறுவனம்?..

google news
Continue Reading

More in latest news

To Top