Connect with us

latest news

எல்லா கூட்டமும் ஒரே இடம் தானா? பாக்கியாவுக்கு இருக்க சோதனை போதாதா? முடியல…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராஜீயை ரூமில் தனியாக விட்டுவிட்டு எல்லாரும் தூங்க செல்கின்றனர். அந்த நேரத்தில் கண்ணன் ரூமுக்குள் நுழைகிறார். நீ ஏன் வந்த என ராஜீ கேட்க போனை தான் நீ எடுக்க மாட்டிக்கிறாயே என கண்ணன் கூறுகிறார்.

எங்க அப்பா, அம்மா என் மேல எனக்கு எவ்வளோ நம்பிக்கை வச்சிருக்காங்க என வர மறுக்கிறார். அப்படியா நீ என்னை ஏமாத்திட்ட நான் ஊரு புல்லா போஸ்டர் அடிச்சு ஓட்டிட்டு, உன் வீட்டு முன்னாடி விழுந்து சாகுறேன் என்கிறார். இதனால் பயந்து கண்ணனுடன் கிளம்ப முடிவெடுக்கிறார்.

இதையும் படிங்க: ரஜினியோடு நேரடியாக போட்டி போட்ட பாக்கியராஜ் படங்கள்… அட இந்த படமும் லிஸ்ட்ல இருக்கா!…

பின்னர் அங்கிருந்த நகையை பார்த்து கண்ணன் எடுத்து செல்லலாம் எனக் கூற தான் சேர்த்து வைத்த காசை கொடுக்கிறார். பின்னர் ராஜீ பாத்ரூம் சென்று வர அதற்கு அங்கிருந்த நகையை எடுத்து பெட்டிக்குள் மறைத்து வைக்கிறார். பின்னர் இருவரும் வீட்டை விட்டு கிளம்புகின்றனர்.

காரில் சென்று கொண்டு இருக்கும் போது குழந்தை அழுகிறது. ஈஸ்வரி முன்னேற்பாடாக குழந்தைக்கு கொண்டு வந்த பாலை கொடுக்கிறார். அதை குடித்து விட்டு மீண்டும் உறங்கிவிடுகிறது. இதை பார்த்து செழியனும் நிம்மதி அடைகிறார். பின்னர் பாக்கியா கால் செய்வதாக கூற எடுக்காத அப்புறம் பேசிக்கலாம். வண்டியை திருநெல்வேலிக்கு விடு எனக் கூறிவிடுகிறார்.

இதையும் படிங்க: பாலிவுட்டை காப்பாத்துனவருக்கே விருது இல்லையா!.. 6 விருதுகளை அள்ளிய அனிமல்.. கடுப்பான ஃபேன்ஸ்!..

ஜெனி கோயில் போய் வீட்டுக்கு வந்து குழந்தை இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அங்கிருப்பவர்களிடம் கேட்க உன் புருஷனும் அவர் பாட்டியும் எடுத்து சென்றனர். நாங்க என்ன செய்வது என கையை விரிக்கின்றனர். இதனால் ஜோசப் போலீஸில் புகார் கொடுக்கலாம் என்கிறார். ஆனால் மரியம் தடுத்த நாளை நிகழ்ச்சியை வச்சிக்கிட்டு இப்போ இது தேவையா? முத குழந்தையை கூட்டிக்கிட்டு வாங்க எனக் கூறிவிடுகிறார்.

ஜோசப் நேராக செழியன் வீட்டுக்கு வந்து குழந்தையை தேட ராமமூர்த்தி ஒன்னும் புரியாமல் முழிக்கிறார். பின்னர் செழியன் மற்றும் ஈஸ்வரியை கேட்க அவர்கள் கோயில் போய் இருப்பதாக கூறுகிறார். ஜோசப் குழந்தையை தூக்கிட்டு போயிட்டாங்க என ஷாக் கொடுக்கிறார். உங்களை சும்மா விட மாட்டேன் என மிரட்டி விட்டு செல்கிறார்.

பின்னர் ராமமூர்த்தி பாக்கியாவுக்கு கால் செய்து விஷயத்தினை சொல்ல அவரும் அதிர்ச்சி அடைகிறார். பின்னர் செழியனுக்கு கால் செய்ய ஒரு கட்டத்தில் போன் ஸ்விட்ச் ஆஃப் என வருகிறது. இங்கு ராஜீ வீட்டில் எல்லாரும் எழுந்து குளித்து விட்டு கல்யாணத்துக்கு தயாராகின்றனர். ராஜீயை எழுப்பலாம் எனக் கூற அவ கொஞ்ச நேரம் தூங்கட்டும் என சித்தி சொல்வதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தா பிரச்சனை வருமா?.. ஆரம்பத்திலேயே ஏழரையை கூட்டும் பிக் பாஸ் ரச்சிதா!..

google news
Continue Reading

More in latest news

To Top