
Actor Rajkiran: தமிழ் சினிமாவில் ஒரு அந்தஸ்த்தான இடத்தில் இருக்கும் நடிகர் ராஜ்கிரண். ஹீரோ மெட்டிரியல் இல்லை என்றாலும் இவர் ஹீரோவாக நடித்த அனைத்துப் படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். தற்போது ராஜ்கிரண் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ராஜ்கிரணின் மகள் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். சன் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த சீரியல் நாதஸ்வரம். இந்த சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் முனீஷ்ராஜ். இவரும் ராஜ்கிரணின் மகளும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இதையும் படிங்க: எதிர்ப்பை மீறி உன்ன நடிக்க வைக்கிறேன்.. நிரூபிச்சி காட்டு!.. கமலுக்கு டெஸ்ட் வைத்த பாலச்சந்தர்..
ஆனால் இவர்கள் திருமணத்திற்கு ராஜ்கிரண் தரப்பில் மிகுந்த எதிர்ப்பு இருந்தது. ஆனால் அதையும் மீறி ராஜ்கிரண் மகள் பிரியா முனீஷ்ராஜை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் மகள் பிரியா தன் தாய் மீது புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதாவது என்னை பற்றி தவறாக சமூக வலைதளங்களில் பேச வைக்கிறார்கள் என்றும் என்னை போனில் தொடர்பு கொண்டு மெண்டல் டார்ச்சர் கொடுக்கிறார்கள் என்றும் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்து அந்த வீடியோவை ஒரு சமயம் வெளியிட்டிருந்தார்.
அதே போல் இன்றும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் பிரியா. அதாவது நான் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் என்றும் முனீஷ் ராஜை திருமணம் செய்தேன் என்றும் ஆனால் நாங்கள் இருவரும் தற்போது பிரிந்து வாழ்வதாகவும் இந்த திருமணம் சட்டப்படி நடக்கவில்லை என்றும் கூறி,
இதையும் படிங்க: பவதாரிணி இறப்புக்கு இதனால் தான் சித்தப்பா கங்கை அமரன் வரலை… விஷயத்தை கசியவிட்ட பயில்வான்…
எனது அப்பாவை மிகவும் நான் காயப்படுத்திவிட்டேன் என்றும் சாரி டேடி என்றும் கூறி அழுது அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மொத்ததில் முனீஷ்ராஜுடன் பிரியா ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு இப்போது பிரிந்து வாழ்கிறார் என்று புரிகிறது. இதன் பிறகு ராஜ்கிரண் என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.