உங்கள தேடிட்டு இருந்தோம்! ரசிகர் சொன்னதுக்கு சரியான தக் லைஃப் கொடுத்த அஜித்.. குசும்பு புடிச்ச தல

Published on: February 2, 2024
ajith
---Advertisement---

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். பேசியே ஸ்கோர் பண்ணுவதை விட பேசாமலேயே ஸ்கோர் செய்து வருகிறார் அஜித். அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருந்தாலும் அஜித் மீது இந்தளவு ரசிகர்கள் வெறி கொண்டு அலைகின்றனர்.

அவரை பற்றி பல விமர்சனங்கள் எழுந்தாலும் அதை கண்டு கொள்ளாமலேயே அவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். நல்ல மனிதர், மனிதாபிமானமுள்ள மனிதர் என்றெல்லாம் அவருடன் பழகியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம்.

இதையும் படிங்க: கட்சியில் ஆள் சேர்க்க விஜய் போடும் மெகா பிளான்!.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!..

பெரும்பாலும் வெளி நாட்டிலேயே பயணம் செய்து வரும் அஜித்தை பின் தொடர்ந்து அங்கேயும் நம் தமிழ் நாட்டு மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர். ஆங்காங்கே இருக்கும் தமிழ்வாழ் வெளி நாட்டு மக்கள் அஜித்தை பார்த்ததும் கடவுளை நேரில் பார்த்த ஒரு உணர்வில் பூரிப்படைந்து விடுகின்றனர்.

அப்படித்தான் துணிவு படம் முடிந்த கையோடு அஜித் பைக் பயணம் சென்றார். இந்திய அளவில் அந்த பயணம் அமைந்தது. அப்போது அவரை பின் தொடர்ந்து தமிழ் ரசிகர்கள் சென்று கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: அதிரிபுதிரியாக வெளியான ‘ரோமியோ’ பட போஸ்டர்.. வேற வழியில்லாம தஞ்சம் அடைந்த விஜய் ஆண்டனி

அதை பார்த்ததும் அஜித் தனது பைக்கை நிறுத்திவிட்டு எங்கு இருந்து வருகிறீர்கள்? என கேட்டார். அதற்கு அவர்கள் எங்களுக்கு கோயம்புத்தூர் சார். உங்கள தேடிக்கிட்டு இருந்தோம் என்று பதில் கூறினர்.

அதற்கு அஜித் தேடிட்டு இருந்தீங்களா? நான் என்ன கொலகாரனா? கொள்ளக்காரனா? என அவர்களுக்கு சரியான தக் லைஃப் கொடுத்து சிரித்தார். இது பழைய சம்பவம் என்றாலும் அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: மீண்டும் சர்ச்சையில் சிக்க காத்திருக்கும் நயன்! 90ஸ் ஹிட் படத்தில் நடிக்க போறாராம்… வாய் சும்மா இருக்குமா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.