Cinema News
தொழில் மேல சத்தியம்!.. நான் சொல்லவே இல்ல!.. மன்னிப்பு கேட்கும் லால் சலாம் பட நடிகை!..
Dhanya balakrishna: தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருபவர் தன்யா பாலகிருஷ்ணா. ஏழாம் அறிவு படம் மூலம் இவர் சினிமாவில் நடிக்க துவங்கினார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் தோழியாக நடித்திருப்பார். அதன்பின் நீதானே என் பொன் வசந்தம், ராஜா ராணி, யார் இவன், கார்பன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவர் பெங்களூரை சேர்ந்தவர்.
பெரும்பாலான படங்களில் கதாநாயகிகளின் தோழியாக நடித்திருக்கிறார். மேலும், சில தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இப்போது ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் படத்திலும் நடித்திருக்கிறார். இங்குதான் பிரச்சனை துவங்கியது.
இதையும் படிங்க: நயன்தாராவை ஓவர்டேக் பண்ண பிளான் போட்ட திரிஷா!. இப்படி எல்லாம் வீணாப்போச்சே!..
சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு காவிரி நீரை கேட்டு கர்நாடகாவை வலியுறுத்திய போது தன்யா பாலகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் ’தண்ணீருக்காகவும், மின்சாரத்திற்காகவும் எங்களை கெஞ்சுகிறார்கள். எங்கள் ஊரில் வந்து வசிக்கிறீர்கள். உங்களுக்கு வெட்கமா இல்லையா?’ என தன்யா பதிவிட்டதாக கூறி அவரின் டிவிட்டர் பதிவின் ஸ்கிரீன்ஷாட்டும் வெளியானது.
தமிழ்நாட்டை இவ்வளவு அசிங்கமாக பேசிய இவரை தமிழ் சினிமாவில் எப்படி நடிக்கலாம் என பலரும் டிவிட்டரில் பொங்கினார்கள். பலரும் ஐஸ்வர்யா ரஜினிக்கு டேக் செய்து கோபப்பட்டனர். லால் சலாம் படம் இந்த மாதம் 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த பிரச்சனை படத்தின் வசூலை பாதிக்குமா என்கிற பயமும் படக்குழுவுக்கு வந்தது.
இதையும் படிங்க: விஜய்க்கு பெர்சனலா ஒன்னு சொல்லனும்! கட்சி பெயரை அறிவித்ததும் தாய் ஷோபா அனுப்பிய ஆடியோ
இந்நிலையில், இதுபற்றி விளக்கமளித்துள்ள தன்யா பாலகிருஷ்ணன் ‘அந்த பதிவை நான் போடவில்லை. ட்ரோல் செய்யும் ஒரு நபரால் போடப்பட்டது. இதை ஆதாரப்பூர்வமாக என்னால் நிரூபிக்க முடியவில்லை. கடந்த 12 வருடங்களாக இதுபற்றி நான் பேசாமல் இருந்ததற்கு காரணம் என் மீதும், என் குடும்பத்தின் மீது இருந்த அச்சுறுத்தல். நான் என் சினிமா பயணத்தை துவங்கியதே தமிழ் சினிமாவில்தான். இப்படிப்பட்ட கருத்தை நான் விளையாட்டாக கூட சொல்லமாட்டேன்.
இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும் இதில் என்னுடைய பெயர் சம்பந்தப்படுத்தப்பட்டு விட்டது. அதற்காக தமிழக மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். என் தொழில் மீது சத்தியமாக நான் அப்படி செய்யவில்லை. இந்த உண்மையை நீங்கள் நம்புவீர்கள் நன நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.