கில்மா படங்களில் ஆடையே அணியாமல் நடித்து வந்த பூனம் பாண்டே கர்ப்ப வாய் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு கொடுக்கிறேன் என்கிற பெயரில் தான் அந்த நோய் காரணமாக இறந்து விட்டதாக தனது குழுவினர் மூலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பூனம் பாண்டே பல முறை தேசிய அளவில் சர்ச்சைகளை கிளப்பி உள்ள நிலையில், அவர் மீது பல வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. கோவாவில் டேம் அருகே ஆடையே அணியாமல் பொதுவெளியில் எந்தவொரு அனுமதியும் வாங்காமல் டிரெஸ் போடாமல் அவர் நடத்திய போட்டோஷூட் காரணமாக கோவா போலீஸார் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.
Also Read
இதையும் படிங்க: கருப்பா இருந்தா ரஜினிக்கு தம்பியா?.. அவமானத்தை தாண்டி வளர்ந்த கேப்டன் விஜயகாந்த்…
இந்நிலையில், நல்ல நோக்கத்திற்காக இப்படி தான் இறந்து விட்டதாக பொய் நாடகம் ஆடி தனது நெருங்கிய நண்பர்களையும், ரசிகர்களையும் மீடியாவையும் ஏமாற்றிய பூனம் பாண்டேவுக்கு எதிராக அனைத்திந்திய சினிமா சம்மேளன சங்கத்தினர் எஃப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.
பணத்துக்காகத்தான் பூனம் பாண்டே இந்த மோசமான பப்ளிக் ஸ்டன்ட் செய்தார் என்றும் இவரை சும்மா விட்டால் தொடர்ந்து பலர் இதே ரூட்டை கையில் எடுப்பார்கள் என அதில் குறிப்பிட்டுள்ளனர். சமூக வலைதளத்தில் தவறான தகவலை பரப்பினார் சட்ட பிரிவு 67ன் படி 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் ஃபைன் கட்ட வேண்டுமாம்.
இதையும் படிங்க: பிக்பாஸ்ல இருந்து வெளியே வந்ததும் சிவகார்த்திகேயன் என்கிட்ட சொன்னது! சீக்ரெட்டை உடைத்த தினேஷ்
தொடர்ந்து இதே போல செய்யும் நபர்களுக்கு 5 ஆண்டுகள் வரை கம்பி எண்ண வேண்டிய சூழல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். நடிகை பூனம் பாண்டே அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவாரா? என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.



