ரஜினியின் பேச்சாற்றல் பற்றி ஏ.வி.எம்.சரவணன் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னவென்று பார்ப்போமா…
மனிதன் படம் ஏவிஎம்மின் மாபெரும் தயாரிப்பு. இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் அப்போது பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்தின் வெள்ளி விழாவில் ரஜினியைப் பேச வைப்பதற்காக அவருக்கு ஒரு தாளில் எழுதிக்கொடுத்தாராம் ஏவிஎம்.சரவணன்.

அதைப் படித்துப் பார்த்த ரஜினி அதை சட்டைப் பைக்குள் வைத்து விட்டு சரளமாகப் பேச ஆரம்பித்து விட்டாராம். இது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து விட்டது. அந்த விழாவில் ரஜினி பேசிய விஷயங்கள் செம மாஸாக இருந்தன. அவர் சொன்னது இதுதான்.
ஏவிஎம் சரவணன் சார் பற்றி எல்லோரும் இந்த விழாவில் நல்லவிதமாக சொன்னாங்க. ஆனா நல்லது சொல்லும்போது கெட்டதும் சொல்ல வேண்டும். நான் சரவணன் சார் பற்றி சில கெட்டது சொல்லப் போறேன். எனக்கு மேடையில பேசறதுன்னா பயம். பேச வராத என்னை ரஜினி நல்லா பேசறார்னு பேச வைத்தவர் ஏவிஎம்.சரவணன்.
இதையும் படிங்க… ஒருத்தர் கூட வாங்கலயே!.. லால் சலாம் படத்துக்கு இப்படி ஒரு நிலமையா?!.. ஐயோ பாவம்…
இதே மாதிரி தான் ஊர்க்காவலன் படத்தின் வெற்றி விழாவில் பேசினேன். அரசியல் என்பது தர்மசத்திரம். தர்ம போராட்டம். அப்படின்னு பகவான் கண்ணன் குரு ஷத்திரத்தில் சொன்னார். அரசியல் என்பது ஒரு சதுரங்க விளையாட்டு. இது சாணக்கியன். சந்திரகுப்தர் காலத்தில் சொன்னது.
அரசியல் ஒரு சாக்கடை என்று அண்ணா சொன்னார். இந்தக் காலத்தில் இப்படி நான் பேசியதை வச்சி அரசியலில் இறங்கப்போறர் ரஜினின்னு முடிவு கட்டிட்டாங்க. அதனால் என் ரசிகர்களுக்குள் சண்டை, குழப்பம். அப்ப சொன்னேன். நான் நிச்சயமா என் ரசிகர்களை அரசியலுக்கு இழுக்க மாட்டேன். நானும் இறங்க மாட்டேன். நான் என் ரசிகர்களை ஆன்மிகத்தில் தான் திருப்புவேன் என்றார்.
