லோகேஷ் படத்துக்கு தேதி குறித்த ரஜினி!.. பக்கா பிளான் போட்டு காய் நகர்த்தும் தலைவர்!..

Published on: February 12, 2024
lokesh
---Advertisement---

Thalaivarf 171: ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த உற்சாகத்தில் லால் சலாம், வேட்டையன், லோகேஷ் கனகராஜுடன் ஒரு படம் வேகமாகவும், தொடர்ந்தும் படங்களை புக் பண்ணினார் ரஜினி. மகள் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒருபக்கம், ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தில் பஹத் பாசில், தெலுங்கு பட நடிகர் ராணா, அமிதாப்பச்சன், ரித்திகா சிங் என பலரும் நடித்து வருகிறார்கள். சென்னை, நாகர் கோவில், கன்னியாகுமாரி, கேரளா என பல ஊர்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

இதையும் படிங்க: ரகசிய திருமணம் செய்ய இருக்கும் சிவகார்த்திகேயன் நாயகி… வேற லெவலில் போட்ட ப்ளான்…

இப்போது வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஹைதராபாத்தில் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. ரஜினி கொடுத்த ஒத்துழைப்பில் படம் வேகமாக முடிந்துவிட்டது.

இப்படத்தின் இயக்குனர் ஜெய்பீம் படத்தை இயக்கியவர் என்பதால் வேட்டையன் படமும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படம் முடிந்தபின் எல்லோரும் எதிர்பார்க்கும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார்.

இதையும் படிங்க: ரஜினி , கமலை விட பாக்யராஜுக்கு வந்த மவுசு! பாத்ரூம் வரை சென்ற பெண் – கடைசில என்னாச்சு தெரியுமா?

இது ரஜினியின் 171வது திரைப்படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 12 அல்லது ஏப்ரல் 26 என இந்த இரண்டு தேதிகளில் ஏதேனும் ஒருநாள் துவங்கும் என சொல்லப்படுகிறது. அந்த தேதியை ரஜினி முடிவு செய்ததற்கு காரணம் இருக்கிறது. அது இரண்டுமே நல்ல முகூர்த்த நாட்கள் என சொல்லப்படுகிறது.

லியோ படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தலைவர் 171 படத்தில் தன்னை நிரூபித்துவிட வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதி வருகிறார் லோகேஷ். லோகேஷ் – ரஜினி கூட்டணியை காண ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.