Cinema News
கல்லூரியில் கண்ணதாசனை கலாய்த்த மாணவர்கள்!.. கவிஞர் கொடுத்த பதிலடிதான் ஹைலைட்!..
Kannadasan: 50களில் தமிழ் சினிமாவில் கதாசிரியராய், வசனகர்த்தாவாய், பாடலாசிரியராய் நுழைந்தவர்தான் கண்ணதாசன். எம்.ஜி.ஆரின் படங்களுக்கு கலைஞர் கருணாநிதிதான் வசனம் எழுதி வந்தார். ஆனால், அவரோடு மோதல் ஏற்பட்டு அவரை பிரிந்தபின் கண்ணதாசனை தனது படங்களுக்கு வசனம் எழுத வைத்தார் எம்.ஜி.ஆர்.
அப்படி உருவான திரைப்படம்தான் நாடோடி மன்னன். அதன்பின் சில எம்.ஜி.ஆரின் சில படங்களுக்கு வசனம் எழுதினார் கண்ணதாசன். அதேபோல், பாடல்களை எழுதுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை. 50,60களில் பிரபலமான பாடலாசிரியராக வலம் வந்தார். காதல், தத்துவம், சோகம், கண்ணீர், ஏமாற்றம், விரக்தி, நம்பிக்கை என மனித உணர்வுகளை தனது வரிகளில் பிரதிபலித்தார்.
இதையும் படிங்க: வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..
ஒருபக்கம் அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்தார். முதலில் திமுகவில் இருந்த கண்ணதாசன் ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். எனவே, அந்த கட்சிக்கு ஆதரவாக பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசினார். எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்ததால் அவரையும் கடுமையாக விமர்சித்தார்.
இதனால் எம்.ஜி.ஆர் படங்களின் படங்களுக்கு அவர பாடல் எழுதவில்லை. எம்.ஜி.ஆரும் அவரை தவிர்த்துவிட்டு வாலி பக்கம் போனார். அண்ணா, கலைஞர் கருணாநிதி போல சமயோசித புத்தியும் கண்ணதாசனுக்கு உண்டு. அவர் எழுதிய பல பல்லவிகள் அருகில் இருந்தவர்கள் ஏதோ ஒரு மனநிலையில் சொன்னவைதான்.
ஒருமுறை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆண்டுவிழாவுக்கு எம்.எஸ்.வியையும், கண்ணதாசனையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தனர். எம்.எஸ்.வியும் மற்றவர்களும் முதலில் நிகழ்ச்சிக்கு போய்விட்டார்கள். கண்ணதாசன் தாமதமாக போனார்.
இதையும் படிங்க: எம்.எஸ்.வி போட்ட டியூனுக்கு கண்ணதாசன் சிரமப்பட்டு எழுதிய பாடல்… விடிய விடிய விழித்த பாலசந்தர்
எனவே, கோபத்தில் இருந்த மாணவர்கள் ‘லேட் கண்ணதாசன்.. லேட் கண்ணதாசன்’ என காத்தினார்கள். இதைக்கேட்டு சிரித்துக்கொண்டே மேடை ஏறினார் கண்ணதாசன். அதன்பின் மேடையில் பேசியபோது ‘நான் மிகவும் கொடுத்து வைத்தவன்’.. அதிர்ஷ்டசாலி.. புண்ணியம் செய்தவன்’ என சொல்ல மாணவர்கள் புரியாமல் பார்த்தார்கள்.
நான் தாமதமாக வந்தபோது எல்லோரும் லேட் கண்ணதாசன் என கத்தியதை கேட்டேன். பொதுவாக இறந்துபோனவர்களைத்தான் லேட் என சொல்வார்கள். ஆனால், அதைக்கேட்க அவர்கள் உயிரோடு இருக்கமாட்டார்கள். ஆனால், உயிரோடு இருக்கும்போதே ‘லேட் கண்ணதாசன்’ என சொன்னதை கேட்டுவிட்டேன். அதனால்தான் ‘நான் லக்கி மேன்’ என சொன்னேன்’ என சொன்னார் கண்ணதாசன்.
இதையும் படிங்க: ஓடும் காரில் போகும்போதே பாடல் எழுதிய கண்ணதாசன்… கவியரசர்னு சும்மாவா சொன்னாங்க…?!