Connect with us
kannadasan

Cinema History

கார் அனுப்புறதுல கூட இப்படி ஒரு கொள்கையா?!.. கண்ணதாசனுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்..

இப்போது சினிமா நடிகர்களின் கையில்தான் இருக்கிறது. ஒரு நடிகர் யாரை இயக்குனர் என கை காட்டுகிறாரோ அதுவே இறுதியானது. இன்னும் சொல்லப்போனால் தயாரிப்பாளர் யார் என்பதையே பெரிய நடிகர்கள்தான் முடிவு செய்கிறார்கள். நடிகரின் கால்ஷீட் கிடைத்தால் போதும் என தயாரிப்பு நிறுவனங்கள் நினைப்பதுதான் அதற்கு காரணம். ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால் என எல்லோருக்கும் இது பொருந்தும்.

அதனால்தான் இஷ்டத்துக்கு ஆட்டம் போடுகிறார்கள். ஒரு படம் வெற்றி எனில் பல கோடிகள் சம்பளத்தை ஏற்றி விடுகிறார்கள். ஒரு நடிகருக்காக ஒரு இயக்குனர் 3 வருடங்கள் எல்லாம் காத்திருக்கும் நிலை உருவாகி இருக்கிறது. ஆனால், சினிமாவின் துவக்க காலத்தில் இப்படியெல்லாம் இல்லை.

இதையும் படிங்க: வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..

50,60களில் தமிழ் திரையுலகில் தயாரிப்பு நிறுவனம் என்ன முடிவெடுக்கிறதோ அதுதான் இறுதியான முடிவு. ஏனெனில், அப்போது சினிமா தயாரிப்பாளர்களின் கையில் இருந்தது. நடிகர்களின் வேலை சம்பளத்தை வாங்கி கொண்டு நடிப்பது மட்டுமே. கதையிலோ, கதாநாயகி தேர்விலோ தலையிட முடியாது. எம்.ஜி.ஆர், சிவாஜி கூட இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு நடித்தார்கள்.

தமிழ் சினிமாவில் பாரம்பரிய சினிமா நிறுவனம் என்றால் ஜெமினி ஸ்டுடியோவை சொல்லலாம். எதையும் சரியாக திட்டமிட்டு படம் எடுப்பவர்கள் இவர்கள். 1940ம் வருடம் எஸ்.எஸ்.வாசனால் துவங்கப்பட்ட நிறுவனம் இது. 1941ம் வருடம் முதல் 1975 வரை பல திரைப்படங்களையும் இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

இதையும் படிங்க: ஒரே மெட்டில் ரெண்டு கதைகளை சொன்ன கண்ணதாசன்.. எந்தப் படத்தில் தெரியுமா?..

குறிப்பாக சந்திரலேகா, அவ்வையார், மோட்டார் சுந்தரம் பிள்ளை, ஒளி விளக்கு ஆகிய முக்கிய படங்களை தயாரித்திருக்கிறார்கள். ஒருமுறை ஜெமினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்த ஒரு படத்திற்கு கவிஞர் கண்ணதாசன் பாடலை எழுத வேண்டியிருந்தது. இதற்காக கண்ணதாசன் சொன்ன நேரத்திற்கு அவரின் வீட்டுக்கு கார் அனுப்பப்பட்டது. ஆனால், அங்கு நிறைய பேர் வந்திருந்ததால் கண்ணதாசன் அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டால் பார்த்தால் கார் அங்கே இல்லை.

அதிர்ச்சியடைந்த கண்ணதாசன் தனது உதவியாளர் மூலம் விசாரிக்க சொன்னார். அதற்கு பதில் சொன்ன ஜெமினி ஸ்டுடியோ ‘நீங்கள் சொன்ன நேரத்திற்கு கார் அனுப்பினோம். எங்கள் நிறுவனத்தின் கொள்கை படி அதிகபட்சம் 30 நிமிடங்கள் வரை ஓட்டுனர் காத்திருப்பார். சம்பந்தப்பட்டவர் வரவில்லை எனில் கார் மீண்டும் எங்கள் நிறுவனத்துக்கு வந்துவிடும். கண்ணதாசன் இப்போது தயாராக இருந்தால் மீண்டும் கார் அனுப்புகிறோம்’ என சொன்னார்களாம். ஒரு காரை அனுப்பும் விஷயத்தில் கூட ஜெமினி ஸ்டுடியோ நிறுவனம் ஒரு கொள்கையோடு இருந்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் நாம் புரிந்துகொள்ளலாம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top