Connect with us

Cinema News

சென்னை ரசிகர்களை சந்தித்த விஜய்!.. அட எங்கேன்னு பாருங்க!.. கோட் சூட்டிங் ஸ்பாட் இனி அனல் பறக்குமே!..

பாண்டிச்சேரியில் கோட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது சென்னையில் கோட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, மீனாக்‌ஷி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

சென்னையில் ஒரு வீட்டுக்குள் விஜய்யின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதை அறிந்த ரசிகர்கள் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டனர். ரசிகர்கள் அதிகம் வருவதை அறிந்த நடிகர் விஜய் உடனடியாக மாலையில் வழக்கம் போல ரசிகர்களை வெளியே வந்து கையசைத்து சந்தித்து சென்ற காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: சிவாஜியுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்!.. எம்.ஜி.ஆர் சொன்ன காரணத்தை பாருங்க!…

கரு நீல சட்டை அணிந்து கொண்டு மீசை இல்லாத லுக்கில் சென்னையில் உள்ள போரூரில் உள்ள பாழடைந்த வீடு போன்ற செட்டப்பில் நடிகர் விஜய் இருக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. கேட் மூடியுள்ள நிலையில், கீழே இருந்து ரசிகர்கள் கேட்டை உலுக்கிக் கொண்டு கூச்சலிட்டு தளபதி என்றும் தலைவா என்றும் கோஷம் போட்டு விஜய்யை பார்த்த உற்சாகத்தில் கத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் முழுவதுமே மகன் விஜய் தோற்றத்தில் தான் விஜய் வரப்போகிறாரா தொடர்ந்து இதே லுக்கில் இருக்கிறாரே? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: தடபுடலாக நடைபெறும் திருமண ஏற்பாடுகள்.. வருங்கால கணவருடன் ரகுல் ப்ரீத் சிங்! வைரலாகும் புகைப்படம்

மேலும், நடிகர் விஜய் தான் இந்த படத்தில் மெயின் வில்லனே என்றும் பிரசாந்த், மோகன் எல்லாம் வில்லன் இல்லை என்றும் அப்பாவை பழி வாங்கும் மகனாக விஜய் மிரட்டப் போகிறார் என்று ஏகப்பட்ட கதைகளை கூறுகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top